என் தங்கைக்கு தாலாட்டு
ஆராரோ ஆரிரரோ
என் அன்னை தந்த பூ இவளோ !
மதுரை மல்லிகைப் பூ மனமிவளோ
கோடை கண்ட மழை இவளோ !
ஆராரோ ஆரிரரோ
நிலவொளிய நீயும் கேட்ட
நிலவ வீட்டுக்குள்ள கட்டி வைப்பேன் !
பனித்துளிய நீயும் கேட்டா
மேகத்த மெத்தையாக்கி போட்டு வைப்பேன் !
பேசும் மயிலிறகே பேசாம
தூங்கு கண்ணே !
அம்மாவும் நான்தான் இங்கே
அழகாக தூங்கு கண்ணே !
உன் அண்ணே தாலாட்டுரேன்
பூவரும்பா தூங்கு கண்ணே !
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிரரோ ரோ .........!!!