இறைவன் ஒருவனே

எல்லா மதமும் ஒன்றேதான்
இறைவன் என்றும் ஒருவன் தான்
எதற்கு எமக்குள் வேற்றுமைகள்

மனிதன் பிரித்தான் கடவுளை
மதம் என பெயரும் வைத்தான்
மாற்றங்கள் வந்தது மனிதனிடம்
மறைந்து போனது மனிதத்துவம்

அழித்திட முடியாத நோயாக
அகிலத்தில் பரவியது
மதவெறி தான்

எதிர்த்து வந்தால் எவரேனும்
அவரின் முடிவு மரணம் தான்


மனிதத்தை தொலைத்து
மதவெறி
தேவை தானா சொல்லுங்கள்

மாற்றம் வேண்டும் வாழ்க்கை தனில்
கொஞ்சம் மாறி தான் பார்ப்போமே

எழுதியவர் : கயல்விழி (9-Nov-14, 8:42 am)
Tanglish : iraivan oruvane
பார்வை : 560

மேலே