தல்லாட்டம்

தினம் தண்ணீயடிச்சி போதை தலைக்கேத்தி
விதண்டா வாதம் பண்ணுகிற அண்ணாச்சி !
ஒரு நிமிஷம் - நி கொஞ்சம் நின்னுயோசி,
உன் குடும்பம் வறுமை நோயால் புண்ணாச்சி !

தேவையா உனக்கு இந்தக் குடி ?
உன்குடல் ஆவியால் வெந்தப்படி !
எருமை வாகனனை; உன் விழி
வாசலுக்கு அழைத்தப்படி !
இருக்குது தினந்தோறும்;
உன் குடும்பம் பயத்தால் தடுமாறும் !
நீயோ அதைப்பற்றி
சிறு கவலையும் படக்காணோம் !

பாடுப்பட்டு சேர்த்த பணங்கள்
பாழும் குடிக்கு அர்ப்பணமா ?
வீடு வாசல் இருந்தும் உனக்கு
குடி கடையே சொர்கமா ?

நாளை உன் சந்ததி
உனக்கு கொடுக்கும் நெருக்கடி
உன்னால் தாங்க முடியாது,
நீ இருந்தும் இடுகாட்டுத் திருநீரூ !

அணியும் சட்டையில் காக்கும் அழுக்கை
வெளுத்தெடுக்க சோப்புதவும் !
உழைக்கும் உடம்பை உற்சாகப்படுத்த
ஊக்க வார்த்தைகள் நன்குதவும் !

நினைத்தபடிக்கு நி குடிக்கும் மதுவால்
நாற்றமது வீட்டை நாரடிக்கும் !
குவளை மதுவதை நீ கொஞ்சுவதால்
உன் குலத்துக்கே குழித்தோண்டும் !

மனைவியின் தாலியை களவாடி
மார்வாடி கடையில் அடகாய் நீ
வைக்கும்போதே பாதி செத்துவிட்டாய்
செத்த பிணமாய் வீதி சுற்றுகின்றாய் !

எழுதியவர் : இரா.மணிமாறன் (9-Nov-14, 8:33 am)
பார்வை : 87

மேலே