கணிகையின் கேள்வி

பெரிய பெரிய மனிதர்கள் கூட
பங்களா விலாசத்தை கொடுத்ததுண்டு
சாதி சாதி என்று பார்க்கும்
எவரும் என்னிடம்
சாதி பார்பதில்லை
என்னை தீன்டிய எவரும்
என்னை திரும்ப விட்டதில்லை
பத்திரிகையாளர்களே
விபசாரிகள் கைது என்று தானே
செய்தி வெளிவருகிறது
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விவரம் வெளிவராது ஏன்?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?

எழுதியவர் : கபிலரசன்.ப (9-Nov-14, 8:03 am)
பார்வை : 83

மேலே