செல்ல தங்கைக்கு

தத்தி தத்தி நடை
போட்ட குட்டி தேவதை
நீயம்மா
எட்டி நீ உதைத்தாலும்
தாங்கிய தாயவள்
நானம்மா


குழந்தை நீ குமரியானாய்
குலமகளாய்
வலம்வந்தாய்


கொஞ்சமாய் நான்
கோபித்து கொண்டாலும்
கெஞ்சியே என்னை நீ
வென்றாய்

வண்ண மயிலே
உன்னை வர்ணிக்க
வார்த்தை எங்கே
நான் எடுப்பேன்

தோழியும் நீ
நான் சுவாசிக்கும்
மூச்சும் நீ
சோகங்கள் என்னை
சூலவந்தால்
தோள்கொடுக்கும்
துணையும் நீ

அன்பின் ஊற்று நீ
அழியாத செல்வம் நீ
தங்கமே நீ எனக்கு
தங்கை என்றாலும்
அன்னைக்கு மேல்...!!!

எழுதியவர் : கயல்விழி (9-Nov-14, 3:46 pm)
Tanglish : sella thangaiku
பார்வை : 354

மேலே