பண்பான வார்த்தைகள்

வார்த்தைகள் ஆயிரம் இருக்கலாம்
பேசுவதற்கும் ஏசுவதற்கும்....
நல்லவைகளை எடுத்துரைப்பதற்கும்
தீயன களைவதற்கும்....
ஒதுக்கப் பயிலுங்கள்
ஒவ்வாத பேச்சுக்களை...

சந்திப்புகளின் போதெல்லாம்
கூறிக் கொள்ளுங்கள்
மரியாதை நிமித்தம்
இன்முக "வணக்கம்"......
இணக்கமான உறவுகளுக்கு
வணக்கங்கள் பாலமாய்...

உதவி கிடைக்கும்போதெல்லாம்
நெகிழ்வுடன் உரைத்திடுங்கள்
உதவி புரிந்தோரிடத்தில்
உவகையுடன் "நன்றிகள்"
நன்றி பெறும் வேளைக்காய்
காத்திருந்து உதவுங்கள்
கொடுத்தலும் பெறுதலும்
நடக்கட்டும் நன்றிகளோடு....

தவறிழைக்கும் போதெல்லாம்
கேட்கத் தவறாதீர்கள்
உங்களால் இன்னல்கள் என்றால்
தாழ்மையுடன் "மன்னிப்புகள்"
உடைபடும் மனங்களை
மன்னிப்பு ஒட்டிடும் பசையாய்...

ஆரோக்கிய சூழலில்
வாழ்க்கைப் பயணம்
மின்னிட... மிளிர்ந்திட
வணக்கமும்
நன்றியும் மன்னிப்பும்
வாய் மொழியும் வார்த்தைகளாய்
இனி என்றென்றும் நாவினில்....

எழுதியவர் : சொ.சாந்தி (9-Nov-14, 3:58 pm)
பார்வை : 198

மேலே