சிறகு முளைத்த வானவில்
உடைந்த நிலவும்
பிறையென முளைக்கும்
வானவில் கிழித்து
தேகம் மறைக்க
மேற்கு வானில் மின்னலடிக்கும்
பூக்களின் மொழி
அறியும் புத்தனாய்
சத்தமின்றி சேர்த்த இதழ்களில்
குவிந்த தேன் துளிகள்
எனக்காக
நொடியில் சமையல்
நிலா கிண்ணத்தில்
நட்சத்திரக் கூட்டத்திற்கு
வண்ணத்துப் பூச்சிக்கு
வண்ணம் தீட்ட முயலும்
சித்திரப் பூக்கள்
கைப்பிடிக்குள் சிறைபட்டது
வானம் ....அதை
மெல்லத் திறக்கும்
பனிக்காற்று
சொல்லித் தீருவதேயில்லை
என் தனிமையின் ரகசியம்!!