கனவுகள் மெய்ப்பட வேண்டும்

கனவுகள் மெய்ப்பட வேண்டும்
என் கனவு மெய்ப்பட வேண்டும்
ஆங்கில மொழி அகன்று
தமிழ் மொழி தவழ்ந்து
தடம் பிடிக்க வேண்டும்
பள்ளியிலும் கல்லூரியிலும்
என் கனவு மெய்ப்பட வேண்டும்
ஆங்கிலத்தில் தாலாட்டு கேட்கும்
அழகு நிறைந்த முத்துகள்
செந்தமிழில் செவிக்கிணங்க
செல்ல தாயின் சீராட்டில்
என் கனவு மெய்ப்பட வேண்டும்
தனி நாடு கோரிக்கை
தாகம் தீராமல் தீண்டும்
தீவில் மாட்டிய தமிழருக்கு
அவன் நினைவோடு
என் கனவும் மெய்ப்பட வேண்டும்





முகவரி:
A.RICHARD EDWIN,
Department Of Mechanical Engineering,
PSNA CET,
Kothandaraman nagar,
dindigul-624622.

எழுதியவர் : ஆ.ரிச்சர்டு எட்வின் (9-Nov-14, 6:13 pm)
பார்வை : 108

மேலே