இந்திய இராணுவம்
இந்திய இராணுவம்
அப்பாவின் ஆதரவில்
அம்மாவின் அன்பினில்
தங்கையின் பாசத்தில்
மனைவின் கண்ணீரில்
குழந்தையின் ஏக்கத்தில்
எங்கள் குடிலுக்குள் ஏற்றபடுகிறது
குட்டி மெழுகுவர்த்தி
மெழுகுவர்தியை போலவே
எங்கள் உயிரும் உருகி
உறைந்து கொண்டிருக்கிறது
பனிகாட்டு பாலைவனத்தில்
நாங்கள் இளமையில்
அமைதியையும் புன்னகையையும் அதிகம்
செலவழித்து விட்டோம்
இப்போது சேமித்து
கொண்டுயிருக்கிறோம்
எங்கள் தோட்டத்தில்
பூக்களுக்கு பதிலாக
போர்கள் தான் பூக்கின்றன
இங்கு அன்பிற்கு பதிலாக
ஆயுதங்கள் பரிமாறி
கொள்ளபடுகின்றன
பருவகாலம் பார்த்து
பக்குவமாய் வளர்த்த பயிரை
அடைமழை வந்து
அழிப்பதை போல்
பயிற்சியில் முதிர்சி
பெற்ற ஒரு வீரன்
எதிரிகளால் இறக்கும் போது
எங்கள் இதயமும் சிறிதுநேரம்
வேலைநிறுத்தம் செய்வதை
வேடிக்கை பார்பவர்கள்
தானே நீங்கள்????
நாங்கள் மடிந்த வீரனுக்கு
மௌண அஞ்சலி
செலுத்தும் போது நீங்கள்
மாநாட்டிற்கு பந்தலிட்டீர்கள்
காஷ்மீரில் எக்காலம்
கார்காலம் தான் ஆனால்
எங்களுக்கு மட்டும்
காரிருள் காலம்
பனிமழைக்கு பயந்து
பகலவன் எங்களை
பார்பதே இல்லை
எந்நேரமும் தேன்நிலவு
தேய்கின்றது
தேனீரும் குளிர்பாணம்
ஆகின்றது
வைரமுத்துவின் வரிளில்
இளையராஜாவின் இசையில்
பாலசுப்பரமனி பாடலுக்கு பதிலாக
துப்பாக்கிகளின் ஓலத்தையும்
பீரங்கி பிளிருவதும் தான்
செவி சேருகின்றன
துன்பம் வரும் வேலைகளில்
சிரிக்கனுமாம்
சிதைந்த உடல்களை
வள்ளுவரின் பார்வைக்கு
எடுத்து செல்லுங்கள்
வலிகளை வள்ளுவனும்
உணரட்டும்
ஒருதாய் ஒருமுறை தான்
மரணத்தை சந்திக்கிறாள்
நாங்கள் ஒவ்வொரு முறையும்
மரணத்தை சந்திக்கிறோம்
நீங்கள் கனவு காண்பதற்க்கு
நாங்கள் கண் விழித்திருக்கிறோம்
எங்கள் இதயகுமுறலை
எழுத்துகளால் எழுதிட முடியாது
எங்கள் வலிகளை
பேனா மையால் ஈரபடுத்திட இயலாது
எங்கள் வாழ்க்கை வரலாற்றை
வார்த்தைகளால் நிரப்பிட
இயலாது
எங்களின் ஒவ்வொருவர்
உயிரும் உங்களின்
சந்தோஷத்திற்காகவே
உதிர்கின்றன
உணர்வுகள் தாய்மொழிக்கு
உயிர் தாய்மண்ணிற்க்கு
ஜெய்ஹந்த்.......ஜெய்ஹந்த்