குறும்புக்கார பைய்யன்
என்னடா ! இன்னைக்கு சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்ட ..ஸ்கூல் லீவா ?
இல்லம்மா நான்தான் லீவ் போட்டுட்டேன்
ஏன்?எதாவது தப்பு பண்ணினாயா?
மிஸ் கேட்ட கேள்விக்கு நா பதில் சொல்லல?
ஏன்?
கரும்பலகைய உடைச்சது யாரு?ன்னு கேட்டாங்க
அதுக்கு ஏன் நீ வந்துட்ட ..
அத உடைச்சது நா இல்லன்னு சொன்னா நம்ப மாட்டங்க அதான் வந்துட்டேன்
????
*******************************************************************************************************************************************************************
ஏண்டா ! ஸ்கூல் விட்டு சீக்கிரமே வந்துட்ட ?
நா மிஸ் கேட்ட கேள்விக்கு சரியாதான் பதில் சொன்னேன் ...என்ன வெளில அனுபிட்டங்க ப்பா ...
நீ என்ன பதில் சொன்ன?
காளை மாடு எத்தனை லிட்டர் பால் கரக்கும்னு கேட்டாங்க ..நா 6 லிட்டர் கரக்கும்னு சொன்னேன் அதுக்கு என்ன வெளில அனுப்பிட்டாங்க...
ஹா ஹா ஹா
*****************************************************************************************************************************************************************
இன்னைக்கும் ஏண்டா ஸ்கூலுக்கு போல
மிஸ் போ சொல்லிட்டாங்க
ஏன்?
மழை பெரிசா வெயில் பெரிசான்னு கேட்டாங்கம்மா ...மழைதான் பெருசுன்னு சொன்னேன்
அதுக்கு ஏன் போ சொன்னாங்க
ஏன்னு கேட்டாங்க.. மழை வந்தாதானே மிஸ் என்ன ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டங்கன்னு சொன்னேன் ...உனக்கு படிப்பு வராதுன்னு என்ன வெளில அனுப்பிட்டாங்க .....
????