ஒற்றை இழை

கடலோர மணலில் ஒரு துகள்..
அலை கடல் நீரில் ஒரு துளி ..
பரந்த வானில் சிறு மேகம்..
செம்பரிதியின் ஒளியில் ஒரு பொறி ..
உயர் மேருவின் அடியில் ஓர் செடி ..
வர்ணஜால பட்டாசுகள் மத்தியில் ஊசி வெடி ..
இத்தளத்தில் சீர் படைப்புகளின் இடை..
தவழுகின்ற பல பட்டாடைகளின் ஊடே
மெல்லியதாய் ஒற்றை இழை..
என் பங்கு... இது வரை !
அது கூட நட்புகளின் வினை!
வாழ்க தமிழ் நேசங்கள்..
வாழ்க தமிழ் நெஞ்சங்கள்!

எழுதியவர் : கருணா (10-Nov-14, 1:11 pm)
பார்வை : 86

மேலே