கண்ணா வருவாயா

எங்கெங்கு காணினுமுன் பிம்பமடா
தங்கமே எப்பிறவியிலும்நீயென் சொந்தமடா ....!!
யார்முகம் பார்ப்பினுமுன் சாயலடா
சோர்ந்தயென் நெஞ்சத்தில் காயமடா ....!!
இதயமும் உதிரம் வடிக்குதடா
கண்ணீர் அடக்கி நடிக்குதடா ....!!
உள்ளத்தின் ஏக்கமும் புரியுதடா
வாட்டம் போக்கவே தெரியலடா ...!!
கொஞ்சி மகிழ்ந்திடநீ வேணுமடா
அள்ளி அணைத்திடத் தோணுதடா ...!!
உன்னிடம் தோற்கவே ஆசையடா
என்னைத்தேற்றிட ஆளிங்கு இல்லையடா ...!!
பாதையில் பார்வை பதித்தேனடா
வாதையில் துடிப்பதென் விதிதானடா .....!!