நாளைய சமுதாயம்
உருக்காலைகளில்
உருகி-மறு வடிவம்
பெற்று .
இரவெனும்
பகலெனும் பாராமல்
பயணியர்களை சுமந்து
பயணிக்கும் -தேச
பறவையானேன் .
சமூக!
சாக்கேடால்- வேறுபட்டு
சீர்கெட்டு -பிளவுபட்டு
நசுக்கப்பட்ட உயிர்களுக்கு -உயி ர்காக்கும்
தோழனானேன் .
பிரிவினைமின்மையால் !
ஓலமிடும் சமுகத்தை -பிரிவில்லா பரிவுடன்
ஒன்றிணைக்கும் -சமூக
சேவகனானேன்.
ஆனேன்!
ஆனேன்
பீனிக்ஸ் !
பறவைபோல் -உருக்குலைந்து
தீக்கீரையானேன் .
சமுதாயமே !
சமுதாயமே-இக்கொடியநோ யிலிருந்து
விடுபடு.
இல்லையெல் !
நாளைய !
சமுதாயத்திற்கு
வழிவிடு.
சாதி
மத
மொழி
இன வேறுபாடுகளைந்து -ஒன்றுப்பட்டு
உலகை வெல்லட்டும் .
நட்புடன்
பால.செந்திகுமார்
veltech hightech engg college
ஆவடி,சென்னை-62