அழகிப்போட்டி
கவிஞர்களை
காதல்கொள்ள வைக்கும்
ஏ
நிலா பெண்ணே
உன் அழகின்
ஆணவமா ?
ஆசை காட்டி
ஆடவரை ஏங்க
வைக்கின்றாய் .?
மாதத்தில் பாதி
நாட்கள்
அழகினால் மயக்கி
மீதி நாட்களில் மறைவதாய்
கண்ணாமூச்சி ஆடுகிறாய்.?
அப்பாவி கவிஞர்களை
அடிமைப்படுத்தும்
ஏ
நிலாப்பெண்ணே
ஓர் நாள்
வானம் விட்டு
பூமி வா
அழகி போட்டி நடத்திடலாம்
ஜெயிப்பது யாரென
பார்த்திடலாம்
ஓ
நிலாப்பெண்ணே
நிறத்தில் நீ
அதிகம் தான்
நிஜத்தில் நான்
அழகி தான்
பார்ப்போம் மோதித்தான்
ஆணவம் கொண்டதால்
உன் அழகு
அழிந்து போவது
நிற்ச்சயமே....!!!!!