மாற்றங்கள் மலருமா

இரு மனங்கள் திருமணத்தில் இனைந்து இல்லறம் எனும் குடிலில் அடி எடுத்து வைக்க அப்பப்பா !! என்ன போராட்டங்கள்
இன்றைய சமுதாயத்தில்.. பெண் குழந்தையை பெற்று விட்டால் அவள் தாய் பிறந்த அன்று முதல் அவள் திருமணதிற்காக தியாகங்களால் திட்டமிட தொடங்க ஆயத்தம் ஆகி விடுகின்றாள். பெண் என்ற பெயரை கேட்டாலே திருமணம் என்ற நிகழ்ச்சி தான் முதலில் நினைவிற்கு வருகின்றது இன்று எல்லோர் மனத்திலும் .

. தன்னம்பிக்கை உள்ள, சாதனை படைக்கும், துணிச்சலான, அறிவுள்ள பெண்ணை இவ் வுலகிற்கு நாம் அளிக்க வேண்டும் என ஒவ்வொரு தாயும் முன் வர வேண்டும். பெண்ணை ஒரு விலை கொடுத்து விற்கும் பொருளாய் எண்ணி வளர்க்க கூடாது. எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் அவள் மனம் தளராமல் வாழ அவளுக்கு தன்னம்பிக்கை கொடுத்து வளர்க்க வேண்டும். படைப்பில் தான் ஆண் பெண் என்கின்ற ஒரு வித்தியாசம் .கல்வி அறிவு சுதந்திரம், சுய சிந்தனை, முடிவு எடுக்கும் திறன், கடமை உணர்வு இவை தான் அவளுக்கு திருமண வாழ்வில் ஒரு தாய் கொடுக்க கூடிய சீதனங்கலாய் இருக்க வேண்டும்.

திருமணம் என்கின்ற பெயரில் லட்ச லட்சமாய் கடன் வாங்கி செலவு செய்து என்ன புண்ணியம் ? திருமண முறையில் கண்டிப்பாய் மற்றம் தேவை. நடுத்தர வர்க்க மக்கள் இன்று படும் பாடு ? சொல்லில் அடங்காது அவர்கள் படும் இன்னல்கள்.

15 வயதில் தன தந்தையை இழந்த ஒருவனுக்கு தன் குடும்ப சுமைகள் பாரமாய் தெரியவில்லை. தன் கூட பிறந்த மூன்று அக்காக்களுக்கு வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் (அதாவது திருமணம் செய்ய வேண்டும் ) என்கின்ற சுமை தான் பெரிய சுமையை இருந்தது. 25000 கொடுத்தால் வண்டி வைத்து உள்ள மாப்பிள்ளையாம் . 50000 கொடுத்தால் அரசாங்க வேலை உள்ள மாப்பிளையாம் . ஒரு லட்சம் கொடுத்தால் வீடு உள்ள மாப்பிள்ளையாம் . அடுப்படி வேலை செய்து வெளி உலக அனுபவம் இல்லாமல் இல்லறத்தில் சூடு பெற்று சுகமான சுவை குடும்பத்தில் இருக்கும் இன்னல்கள் தான் என . ஆழ் மனதில் பதித்து வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் பெண்கள் இன்று பலர் பலர் பலர் ......

சமுதாயத்தில் திருமணங்கள் நடத்தும் முறையில் கண்டிப்பாய் மாற்றங்கள் மலர வேண்டும். இதற்க்கு ஆண்களும் பெண்களும் முன்வர வேண்டும் . இதற்க்கு பணத்தை திருமணத்தை இணைக்கும் பாலமாய் அமைக்க கூடாது. பல கோடி ரூபாய் அனவாசியமாய் ஆடம்பரமாய் பகட்டுடன் செலவழிக்க படுகின்றது. ஒரு நிமிடம் இவ்வளவு பணத்தையும் சம்பாதிக்க பட்ட கழ்டத்தை நினைத்து பார்த்தால் தெளிவு பிறக்கும். உறவுகள் வர்த்தகமாக ஆக கூடாது. பிறகு நலமற்ற சுய நலம் தான் அதில் தேங்கி நிற்கும். எளிமையான முறையில் திருமணம் எனும் பந்தத்தில் இனைந்து வலிமையாய் வளமுடன் வாழ்க்கையை வாழ்வோம். சிறு துளி பெரு வெள்ளம். . மாற்றங்கள் மலர எண்ணங்களை புதுப்ப்பிப்போம் .......

எழுதியவர் : kirupaganesh (12-Nov-14, 10:59 pm)
பார்வை : 356

சிறந்த கட்டுரைகள்

மேலே