ராஜா ராணி 3

“என்ன ்கிரிஷ் அமைதியா இருக்க?

ஒன்றிரண்டு வினாடிகள் தயங்கிய கிருஷ்ணா“சாரிம்மா இதெல்லாம் சரியா வராது... வேண்டாமே...”என்றான்.

கிருஷ்ணா இப்படி நேரடியாக மறுப்பான் என்று எதிர்பார்த்திராத சகுந்தலாவிற்கு ஏமாற்றமாக இருந்தது.

“ஏன்டா? அவ விதவைன்னு நான் சொன்னதாலா?

”“ம்ம்ம்...அப்படி இல்லை அம்மா.. எனக்கு என் வருங்கால மனைவி பற்றி சில கனவுகள், எதிர்பார்ப்புகள் இருக்கு... இதெல்லாம் சரியா வராது வேண்டாமே...

யோசித்து முடிவு எடேன் ்கிரிஷ்..

”“ப்ச்...இல்லைம்மா எனக்கு மனைவியா வர போறவ ஒரு தென்றல் மாதிரி இருக்கனும்... நல்ல கலகலப்பா இருக்கனும். பார்க்கும் போதே மனதில் ஒரு சந்தோஷம் வர மாதிரி இருக்கனும்...என்னுடைய எல்லா முயற்சிக்கும் உறுதுணையா இருக்கனும். இன்னும் நிறைய எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கு.. இவங்க விஷயத்தில் இதெல்லாம்.கொஞ்சம் யோசிச்சு பாருங்க அம்மா...

”“ம்ம்ம்...”

அவன் வந்து மூன்று நாட்கள் ஆகி இருந்தது...முதல் நாள் மீராவின் போட்டோவை காண்பித்து பேசியதற்கு பிறகு சகுந்தலாஅந்த பேச்சை தொடரவில்லை. ஆனால் அன்று அவன்சொன்ன பதில் அம்மாவிற்கு ஏமாற்றம் தந்ததை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது...

அன்று இரவு உணவு உண்ணும் போது,“அப்பா, நான் வர திங்கள் போய் வேலையில் ஜாயின் செய்ய போறேன்...

”மற்ற மூவரும் அவனை கேள்வியாக பார்த்தனர்.

“ஏன் ்கிருஷ்ணா ஒரு மாசம் தங்க போறேன்னு சொன்ன, அதற்குள் உங்க அம்மா சமையல் போர் அடிச்சிடுச்சா?

அப்படி எல்லாம் இல்லை அப்பா..”என்ற கிரிஷ்் தயக்கத்துடன் அம்மாவை பார்த்தான்.

இதை கவனித்த ஜானு,“அம்மா எல்லாம் உங்களால வந்தது தான்.அண்ணா எத்தனை சந்தோஷமா வந்தான்..அவனிடம் தேவையே இல்லாமல் அந்த மீரா பத்தி பேச்சை எடுத்து குழப்பி விட்டுட்டீங்க! நான் கேட்கிறேன், நம்ம கிரிஷ்க்கு வேற பொண்ணா கிடைக்காது? அப்படி என்ன அந்த மீராவிடம் ஸ்பெஷல்?”

ஜானுவை நேராக பார்த்த சகுந்தலா்,நிதானமாக பதில் சொன்னாள்.“ஸ்பெஷலா எதுவும் இல்லை தான் ஜானு... வீட்டுக்கு வர மருமகள் பொறுப்பானவளா இருக்கனும், பொறுமை, அன்பு உள்ளவளா இருக்கனும்..பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவளா இருக்கனும்..பார்க்கவும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கனும்..படிச்சிருக்கனும், பண்போட இருக்கனும்..நான் கேள்விப்பட்ட வரையில் இது எல்லாமே மீராவிடம் இருக்கு... பத்து வருஷம் முன்பு அவசர அவசரமா நடந்த கல்யாணம் ஒரு வாரத்தில் முடிஞ்சு போச்சு, அதற்காக அவள் வாழ்க்கை அவ்வளவு தான்னு விடனுமா? நீயே யோசிச்சு பார்!

அண்ணா அவனுக்கு பிடிச்ச மாதிரி அண்ணி செலெக்ட் செய்யட்டுமே அம்மா...

”“மீரா நம்ம குடும்பத்திற்கு ஏற்றவளா இருப்பான்னு தோணிச்சு அதனால சொன்னேன் மற்றபடி நான் என்ன உ...”சகுந்தலா் பேசி முடிக்கும் முன் குறுக்கிட்ட விநாயகம்,

“சகு போதும் இந்த பேச்சு... ்கிரிஷ்உன் கல்யாணம் உன் விருப்பம் போல தான் நடக்கனும்..நீயே உனக்கு பிடித்த மாதிரி ஒரு பொண்ணா பார்த்து எங்க கிட்ட சொல்லு நாங்க வந்து பேசுறோம்...இங்க நல்ல கல்யாண ப்ரோக்கரா பார்த்து பேசி உனக்கு பிடித்த மாதிரி இருக்க பொண்ணா கண்டுபிடி.

“என் மேல் கோபமா அம்மா?

”“கோபமா, ஏன்?

”“நீங்க சொன்னதை நான் கேட்கலைன்னு...”“

கோபம் இல்லை கொஞ்சம் வருத்தம் இருந்தது...ஆனால் உங்க அப்பா பேச்சை கேட்ட பிறகு அதுவும் இப்போ இல்லை..அப்பா சொன்னது போல் நல்ல பொண்ணா செலெக்ட் செய்து சொல்லு...

அம்மாவின் பேச்சு இயல்புக்கு திரும்பி இருப்பதை கேட்டு கிருஷ்ணாவிற்கு திருப்தியாக இருந்தது... தானாகவே அவனின் கலகலப்பும் பேச்சில் வந்து ஒட்டிக் கொண்டது...

“புரியுது மம்ஸ்...நான் செலெக்ட் செய்ற பொண்ணை பார்த்து நீங்க மூக்கு மேல விரலை வச்சு ஆச்சர்யப் பட போறீங்களா இல்லையா பாருங்க..

”“பார்க்க தானே போறேன்..

"பாருங்க பாருங்க!

“ஏன்டா என்னால தான் லீவை கேன்சல் செய்துட்டு சீக்கிரம் வேலையில ஜாயின் செய்ய போறீயா?

”“அட என்ன மம்ஸ் நீங்க, நான் அப்படி எல்லாம் செய்வேனா? புதுசா ஒரு ப்ராஜக்ட் ப்ரோபோசல் ரெடி செய்யனும்னு என்னுடைய மேனேஜர் லீவை கேன்சல் செய்துட்டு வர சொன்னார்... மத்தபடியும் கலயாணத்திற்கு அப்புறம் லீவுவேணுமே மம்ஸ்...

”“நீ நடத்துடா கண்ணா... அம்மா அப்பாவோட இருக்க லீவ் இருக்காது... கல்யாஆஆஅணத்திற்கு அப்புறம் லீவ் தேவை படுமா?”

எப்போதும் தன்னுடன் தோழி போல் பழகும் அம்மாவின் பழைய கிண்டல் பேச்சு திரும்பி வந்துவிட கிருஷ்ணாற்கு மனதில் இருந்த குழப்பங்கள் மறைந்து போனது.

‘வீட்டுக்கு வர மருமகள் பொறுப்பானவளா இருக்கனும், பொறுமை, அன்பு உள்ளவளா இருக்கனும்... பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவளா இருக்கனும்... பார்க்கவும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கனும்...படிச்சிருக்கனும், பண்போட இருக்கனும்..’அம்மா சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது...தானாகவே போட்டோவில் பார்த்த மீராவின் முகம் அவன் நினைவில் தோன்றியது...

‘பத்து வருஷம் முன்பு அவசர அவசரமா நடந்த கல்யாணம் ஒரு வாரத்தில் முடிஞ்சு போச்சு, அதற்காக அவள் வாழ்க்கை அவ்வளவு தான்னு விடனுமா?’அவளுக்கு இப்போதே இருபத்தி ஐந்து இருபத்தியாறு வயது தான் இருக்கும்...பத்து வருடங்களுக்கு முன் என்றால் எத்தனை சின்ன பெண்ணாக இருந்திருப்பாள்... பாவம்... பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்க வேண்டிய நாட்களில் சிறையில் மாட்டிக்கொண்டது போல் அடைபட்டு, சிறகும் ஒடிந்து போனது போலிருந்திருக்கும்... அதற்குமேல் படித்து பட்டம் பெற்று குடும்பத்திற்காக எல்லாம் செய்வது என்றால் அம்மா அவளை பற்றி சொல்வது அதிகமில்லை தான்...இந்த எண்ண ஓட்டத்துடன் தூங்கி போனான் அவன்...

சரி நீ சொல்லு கிரிஷ் உன் கல்யாணம் எப்போ? வீட்டில் ஜல்லடை போட்டு பொண்ணு தேடுறாங்களா?என்று கேட்டான் கிருஷ்ணாவின் நண்பன் சரவணன்.்

”“இல்லைடா, அந்த பொறுப்பை என்னிடமே விட்டுட்டாங்க...

”“என்னது, உன்னை நம்பி விட்டுட்டாங்களா? ஏன்டா உன்னை உங்க வீட்டில தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா?் கிரிஷ் பதில் சொல்லாது சரவணனை பார்த்து முறைத்தான்.

“சரி சரி கோபப்படாதே, எனக்கு மேரேஜ் அரேன்ஜ் செய்த புரோக்கரிடமே உனக்கும் சொல்லி வைப்போம்... உனக்கு பிடிச்ச மாதிரியே பெர்பெக்டாபொண்ணு கண்டுபிடித்து தருவார்...

”“சொல்லுங்க சார் உங்களுக்குஎன்ன மாதிரி பொண்ணு வேணும்?

”கண்ணாடியை சரி செய்தபடி கேட்ட புரோக்கர் பரமசிவத்தை பார்த்து பதில் சொன்னான் கிருஷ்ணா.

“படிச்சிருக்கனும், அழகா இருக்கனும், கேரக்டர் நல்லதா இருக்கனும், நான் வீட்டில் ஒரே பையன், மூத்தவனும் கூட, ஸோகொஞ்சம் பொறுப்பானவளா இருக்கனும்... அம்மா அப்பா என்தங்கை எல்லோரிடமும் நல்ல படியா பழகுபவளா இருக்கனும்...”தெளிவான அவனின் பேச்சை கேட்டு பரமசிவமும், அருகில் இருந்த சரவணனும் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர்.

"பரவாயில்லையே நல்லா தெளிவா இருக்கீங்க! இப்போ எல்லாம் பொதுவா பொண்ணு அழகா இருக்கனும், கை நிறைய சம்பாதிக்கணும்ன்னு தான் எல்லோரும் கேட்குறாங்க... சரிங்க சார் நீங்க கேட்ட மாதிரி நல்ல பொண்ணா கண்டுபிடிச்சிடுவோம்..

நண்பர்கள் இருவரும் பரமசிவம் தந்த முகவரியை தேடி கண்டுபிடித்தனர். அந்த பங்களாவில் தெரிந்த பணக்காரக் களை கிருஷை சற்றே தடுமாற வைத்தது...

எப்போதும் போல் அவர்களுக்கு முன்பே அங்கே ஆஜராகி இருந்த பரமசிவம் அவர்களை, அவர்கள் பார்க்க வந்திருந்த கீர்த்தியின் தந்தை குமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். குமார் நட்புடன் கிருஷ்ணாடன கை குலுக்கினார்.

“நைஸ் மீட்டிங் யூ மிஸ்டர்் கிருஷ்ணா... புரோக்கர் சொன்னதை விட ஹான்ட்சமா இருக்கீங்க!”

சரவணன் சிரிப்பை அடக்க முயல, கிருஷ்ணா ஒரு சின்ன புன்சிரிப்புடன்,“தேங்க் யூ... உங்களை பார்த்தால் கல்யாண வயசில் ஒரு பொண்ணு இருக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க, யூ லுக் வெரி யங்...

”“பரவாயில்லையே, நல்லா பேச தெரியுதே உங்களுக்கு... என் வைப் ரொம்ப ஹெல்த் கான்ஷியன்ஸ் உள்ளவ... சாப்பாடு கட்டுப்பாடு மட்டும் இல்லாமல், தினமும் ஒரு மணி நேரம் ஜிம் போகாவிட்டால் என்னை திட்டி தீர்த்திடுவா...

”அவர்களுக்கு பழச்சாறு எடுத்து வந்த அவரின் மனைவி வசந்தி,“போதும், போதும் எப்போ எதை பேசுவதுனே இல்லை உங்களுக்கு...” என்றாள்.

“நீ சொன்னால் சரி தான்... நம்ம கீர்த்தியை வர சொல்லு, இப்படி ரொம்ப நேரம் எல்லாம் பொறுமையை சோதிக்க கூடாது.

”“சரிங்க...” என்றபடி அவசரமாக உள்ளே சென்றாள் வசந்தி.ஒன்றிரண்டு நிமிடங்களில் சிறு அரவம் கேட்கவும் சற்றே ஆர்வத்துடன் அந்த பக்கம் பார்த்தான் கிருஷ்ணா... பார்த்தவன் பிரமித்து போனான்..

கீர்த்தி கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரத்தில் கொடி போல் இருந்தாள்...தங்க நிறத்தில் மின்னிய அவளின் நிறத்தை எடுத்து காட்டுவது போல் அவள் அணிந்திருந்த கரும்பச்சை சுடிதார் அவளின் அழகுக்கு அழகூட்டியது...வில்லாக வளைந்திருந்த புருவமும், பட்டாம்பூச்சியாகசிறகடித்த கண்ணிமைகளும் அவனைவசியம் செய்தன...செக்க சிவப்பாக இருந்த அவளின் உதடுகளில் இருந்த சின்ன புன்னகையும், கன்னத்தில் இருந்த மெல்லிய சிவப்பு வண்ணமும் அவனை என்னவோ செய்தது...அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரிந்த போதும், அவனால், அவளை விட்டு கண்களை நகர்த்த முடியவில்லை...ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவன் போல் கீர்த்தியை பார்த்தபடி அமர்ந்திருந்தான் கிருஷ்ணா.

தொடரும்...

எழுதியவர் : satheesh (13-Nov-14, 11:22 am)
பார்வை : 592

மேலே