என்னோடு நீ மட்டும்

உன்னை நேசித்தேன்..
இன்னும் நேசிப்பேன்..
நீ எனக்கு கிடைக்காமல்
கூட போகலாம்..
என் நேசிப்பில்
கனவுகள் இல்லை..
கற்பனைகள் இல்லை..
அத்தனையும் நிஜங்கள்..
நிரூபணம் தேவையில்லாத
நிர்மலமான உண்மைகள்..
நீ..நீ மட்டுமே
அதில் முழுதுமாய்
நிறைந்திருக்கிறாய் ..
வெற்றிடமாக
ஒரு இடம் கூட இல்லை..
மழையைக்
கையில் ஏந்தி
குதூகலிக்கும் சிறுவன்
கவனம் வேறு எதில் இருக்கும்..
உனது குளிர்ச்சி..
புன்னகை..
எல்லாம் என் நேசிப்பின் உள்ளே..
பத்திரமாக..எப்போதும் ..என்னுடனே !

எழுதியவர் : கருணா (13-Nov-14, 11:25 am)
Tanglish : ennodu nee mattum
பார்வை : 141

மேலே