அவளுக்கு கொடுத்துவைக்கவில்லை
என் மார்பில்
விழுந்த பூ
பறையாக மாறியது ,
உடலில் ஏற்பட்ட அத்தனை
காயங்களும் சிவப்பு ரத்தத்தை
வாரி இறைத்தன,
பஞ்சில் அமர்ந்தபோது
முள் குத்திய வலியை
உணர்ந்தேன் ,
பெண்ணே !
உன் நெஞ்சில் நான்
இல்லை என்றவுடன்,
என் உடலில்
உயிர் இல்லாததை
உணர்ந்தேன் .