மாணவர்கள்

கல்லூரி வாழ்க்கை புதுப் புது வழிகளை
கைக்கொள்ளும் அதிசயமானது
சொல்லித் தருவது போக மற்றவை யாவும்
தானாகத் தெரிந்து விடும்
எந்த பாதையும் அவர்களுக்கு வெளிச்சம்
கட்டுப்பாடற்ற வண்ணத்துப் பூச்சிகள் போல்
பறந்தும் புரிந்தும் புரியாமலும்
பசுமை நிறைந்த நினைவுகளில் பாடித் திரிந்தும்
தோழமையே தோள் கொடுக்கும் தையிரியத்தில்
ஆனந்த சொர்க்கத்தில் மூழ்கியும்
நல்ல நல்ல திட்டங்கள் வகுத்தும்
நாட்டின் நலன் கருத்தில் கொண்டும் வாழ்வது
கல்லூரி மாணவனின் சுகமும் சுமையும் அனுபவங்களாகவும் உள்ளன
மாணவன் என்றாலே மக்கள் மத்தியில்
நன் மதிப்பும் நல்லெண்ணங்களும்
கல்லூரி மாணவன் நாலும் தெரிந்தவன்
உண்மையும் அதுதான்
அவனே நாளைய நாட்டின் வரலாறு காக்கும்
வலிமை மிக்க முக்கியத்துவம் வாய்ந்த தலைவன்
கல்லூரி மாணவன் எடுக்கும் ஒவ்வொரு திட்டங்களும்
நல்ல முறையில் நாட்டை வழி நடத்தும்
ஒரு சில மாணவர்களால் ஏற்படும் தாக்கங்களால்
மனம் புண்படுகிறது வேதனை கொள்கிறது
ஆனால் நல்லெண்ணங்களும்
குறிக்கோளும் கொண்ட மாணவர்கள்
நாட்டின் சொர்க்கங்கள் நாட்டைக்காக்கும் சிங்கங்கள்
அவர்கள் குரல் என்றும் ஓங்கி நிக்கும்
அவர்களுக்காக நாமும் ஏங்கி நிற்போம்
அவர்களைத் தட்டி கொடுத்து வளர்க்க
உற்ற துணையும் உறுதுணையும் ஆக
இருக்க வேண்டிய பொறுப்பு நமதே
மாணவர்கள் மதிக்கப் பட வேண்டியவர்கள்
பாதுகாக்கப் பட வேண்டிய நாட்டின் சிறந்த பொக்கிஷங்கள்
செல்வம் என்றால் பொருள் அல்ல பொன் அல்ல
மாண்பு மிகு மாணவர்களே

எழுதியவர் : பாத்திமா மலர் (13-Nov-14, 1:38 pm)
Tanglish : maanavargal
பார்வை : 571

மேலே