மாவீரர்

மண் மீது போராடி
மரணத்தை நீர் சூடி
மாவீரம் கொண்டீர்களே

போர் கொண்டு வந்தவனை
நேர் கொண்டு நிறுத்தி
புறம் கட்டாது
அறம் நிலை நாட்டினீர்

ஐம்புலன்கள் ஒன்றாக
அகம் புறம் இரண்டிலும்
தேசபற்றை தீபமாக்கிநீர்

மார்பினில் பாய்ந்த துளை
மரணத்தை அனைத்த போது
குருதித் துளி இறுதி பெற
உறுதியுடன் உருகி
முத்தமிட்டனர்
தாய்த் தமிழ் மண்ணை

வானம் சென்ற நீர்
மீண்டும் மழையாவீர்
எம் ஈழ மண் மலர




********லெனின் *****

எழுதியவர் : இணுவை லெனின் (14-Nov-14, 4:04 am)
Tanglish : maaveerar
பார்வை : 315

மேலே