கிரகத்தின் நிறம் சிவப்பு
எட்டுவோம் விண்ணை முட்டுவோம்
வழிதனில் கிரகங்கள் எட்டுவோம்
போகும் பாதை மறவாதிருக்க
ஓய்வெடுக்கும் கிரஹம் தோறும்
தேசிய கொடியினை சிறகடித்து பறக்க விடுவோம்
தட்டுவோம் கரகங்கள் வாயிலை தட்டுவோம்
பூமியை போல வீடு வாசல் கட்டுவோம்
வேற்று மனிதர் போன்ற வாசிகளுக்கு
தங்கி செல்லும் கிரஹம் தோறும்
கூடிவாழும் கோடி நன்மைகளை சொல்லி தருவோம்
நீல கிரஹம் கூட சிவப்பு கிரஹம் ஒட்டுவோம்
நீர் காற்று நிலம் யாவும் சுற்றுவோம்
புளியோதரை தயிர்சாதம் கட்டுவோம்
போகும் வழியில் வரும் வழியில்
ருசித்து உண்டு நட்சத்திரங்களை ரசித்து மகிழ்வோம்
பல காலம் முயன்று செவ்வாயை அடைந்தோம்
மங்கல்யான் எனும் சிறகுகள் முளைத்தோம்
புதுயான் குருயான் வேகமாய் இனி முயல்வோம்
இன்னும் சரியாக ஏழரை வருடங்களில்
சனியான் அமைத்து மெல்ல சனி கிரஹம் அடைவோம்