பூவிலே சிறந்த பூ
இன்று குழந்தைகள் தினம் ....
பூவிலே சிறந்த பூ உன் சிரிப் பூ
பூவிற் கெல்லாம் நீயே லட்சம் பூ
மொட்டிற் கெல்லாம் மொட்டுப் பூ கமலப் பூ
உன் அழகு கேட்டிடுமே அல்லிப்பூ
உன் இருவிழிகளில் மலரும் பூ என்ன பூ ?
என்னிலே பூத்ததோ தெவிட்டாப் பூ
மென்மைகெல்லாம் மேன்மை உன் சிவப் பூ
உன் புன்னகையில் பூத்தபூ என் வியபபூ
என் கவலை புத்தகம் உன் புன்சிரிப் பூ
என்னிலே பதித்துவிட்டேன் மொழிப் பூ
மொழியிலே சிறந்த பூ என்ன பூ?
உன்னிலே பூத்ததோ உயிர்ப் பூ
உன் அழுகை என் பரிதவிப் பூ
என் அழுகையோ உன் பரிகசிப் பூ
உன் மொழியில் கேட்பேன் இதழ் பூ
என் மொழியில் சிரித்திடும் புகழ் பூ
உன் நடையில் காண்கிறேன் மகிழம் பூ
என் நடையில் பூக்குதே தாழம் பூ
உன்னை கண்டதும் பாடுமே வண்டுப் பூ
என்னைக் கண்டதும் தாவிடுமே செண்டுப் பூ
பூக்களிலே லட்சம் பூ என் அட்சயப் பூ
பூவுக்கே கதை சொல்லுமே உன் மழலைப் பூ