சிற்பியே உன்னை செதுக்குகிறேன்

வளரவிடாமல் வந்து வந்து
வரிசையாய் நிற்கும் தோல்விகள்
வெற்றிக்கு கட்டும் படிக்கட்டில்
கஞ்சமே இல்லை
தோல்வி ஒன்றை படிக்கட்டாக்கி
ஏறி நின்றால் அடுத்தது
மீண்டும் ஒரு படிக்கட்டு
இப்படி படிக்கட்டிலே
பகலும் இரவும் பழகி
பதம் தேடுகிறாயா
தோல்வி எவ்வளவு நீளமோ
அதை விட இரு மடங்கு
வெற்றி நீளமாக வரும்
படியை சரியாக கட்டு
பிடியை சரியாக பிடி
வெற்றி உன் கையில் .



முகவரி:
A.RICHARD EDWIN
Department of Mechanical
PSNA College of Engg and Technology
kothandaraman nagar
dindigul-624622.

எழுதியவர் : ஆ.ரிச்சர்டு எட்வின் (14-Nov-14, 11:44 am)
பார்வை : 129

மேலே