பொறுத்தருள்வாய்க் கிழக்கே - ரகு

நேற்றிரவு
நல்லமழை

நீர்த்தேங்கலில்
மைதானம்
குளக்காட்சி தருமோ...?

இல்லையென்றெதுவும்
சொல்லாமல்
மனைவியின்
சமையல்
சுமூகமாய் முடியுமோ...?

குழந்தையைப்
பள்ளிக்குவிடச்செல்லும்
அவசரப் பயணத்தில்
வாகனஉரசல்
நிகழ்ந்தால்
சட்டென்று
என்னிதழ்கள்
ஒரு புன்னகை
சிந்துமோ...?

கிடப்பில்
போடப்படாமல்
பணியனைத்தும்
நிறைந்து
நிறைவுறுமோ...?

கடங்காரன்
கைசேருமளவாயின்
தொழில்
கல்லாக்கட்டுமோ...?

குழந்தை
உறங்கும்முன்பாக
இரவு
வீடு சேர்ந்திடுவோமோ...?

நடுநிசிவரை
நீடித்திராமல்
உறக்கம்
இமைத்தழுவுமோ...?

இன்றேனும்.... இன்றேனும்....?

எண்ணச்
சிக்கலுக்குள்
சிக்காமல்
லாவகமாய்
நழுவி

எதற்கும்
யாருக்கும்
காத்திராமலேயே
கண்திறந்ததின்றும்
அந்தக்கிழக்கு!

எழுதியவர் : அ.ரகு (14-Nov-14, 3:15 pm)
பார்வை : 106

மேலே