குழந்தைகள் தினம் - அண்ணா பசிக்கிறது என்கிறது ஓர் குழந்தை
பேருந்து நிறுத்தங்களில் ,
ரயில் நிலையங்களில் ,
சாலை ஓரங்களில் ,
கோவில் படிகளில் ,
உனவக வாயில்களில் ,
பசிக்கிறது அண்ணா ?
என்றே ..
தெய்வ வடிவாம் ? ,,
குழந்தை கேட்கும் ..
அந்த நொடிகளே ,
உணர்கிறேன் ..
நான் அடைந்த ..
இந்த ,
மனித பிறவி ..
பாவத்தின் ,
சம்பளம் என்றே ..
அந்த குழந்தைக்கு ,
வாங்கி கொடுத்த ..
உணவில் தெரிகிறது ..
என் ..
தேசத் தலைவர்கள் ,
போராடி பெற்ற
சுதந்திரம் ..
குழந்தை தொழிலாளர்கள் ..
குறைவு ,
மகிழ்ச்சியே ..
குழந்தைகள் ,
கை ஏந்தும் நிலை ..
அதிகம் கொள்வது ,
வருத்தத்திற்குரியது ..
சட்டங்களில் எல்லாம் ,
ஓட்டை ..
இப்படி ஒரு குழந்தை ,
பிச்சை கேட்கிறது ..
நல் வழி ,
அமைத்து கொடுங்கள் ..
என்று ,
காவல் நிலையம் அழைத்தால் ...
அது ,
எடுத்த பிச்சைகளை ..
பிச்சை எடுக்க ,
காத்திருகிறது ..
தொண்டு நிறுவனத்தை அழைத்தால் ,,
சேர்த்து கொண்டு ,
மீண்டும் ..
துண்டு காகிதம் அடித்து ,
வீடு வீடாக ..
அனுதாப பிச்சை ,
கொள்ள செய்கிறது ..
இருபது நிமிட ,
இன்பத்திற்காக ..
பெற்று ,
தூக்கி தெருவில் எரியும் ..
பொருளாகிவிட்டது ...
குழந்தை ???
கடத்தப் படுவதும் ,
பாலியல் வன்முறைக்கு ,
ஆளாவதும் ..
செய்திதாள்களில் ,
வழக்கம் ஆகிட்டு ..
சட்டங்கள் ,
கணம் கொள்ள வேண்டும் ..
தூக்கி எரியும் ,
குழந்தைகளின் பெற்றோரை ..
தூக்கில் ,
ஏற்ற வேண்டும் ..
பிச்சை ,
எடுக்க வைக்கும் ..
பாவிகளின் பிணங்களை ,
கழுகிற்கு இட வேண்டும் ..
பாலியல் துன்புறுத்தும் ,
ஈனப் பிறவிகளின் ..
உறுப்புகளை ,
அறுத்து எறிய வேண்டும் ..
கல்வி உணவு ,
தர இயலாத பெற்றோரை ..
உனக்கெதற்கு பிள்ளை என்றே ,
சந்தியில் வைத்து ,,
செருப்பால் அடிக்க வேண்டும் ,,,
என் நாடு ,
வல்லரசாக வேண்டாம் ..
உணவுக்காக ,
இன்னும் ..
கை ஏந்தும் நிலையும் ,
இனி வேண்டாம் ..
வேண்டாம் ,
இப்படியொரு குழந்தைகள் தினம் ...???