தாயின் அன்பு முத்தம்
தாயின் அன்பு முத்தம்
தாய்மையின் தனித்துவத்தை
தான் பெற்ற பிள்ளையிடம்
தாலாட்டில் தருகிறாள்
அன்பு முத்தத்தை
அன்னையிடமிருந்து பெறும்போது
அகிலம் வென்று
அன்னைமடி சேரும் சந்தோசம்
முத்தம் பெற்ற கன்னம்
முதல் அன்பை முகர்கிறது
முதல் அன்பின் மூச்சிலே
முழு மூச்சும் வாழ்கிறது
தாயின் அன்பில் தாழ்ந்து
தாயின் மடியில் தவழ்ந்து
தாயின் தாலாட்டில் அயர்ந்து
தாய் தரும் அன்பு
எதற்கு ஈடு தெரிந்தால் சொல்லுங்கள் .
முகவரி:
A.RICHARD EDWIN
Department of Mechanical
PSNA College of Engg and Technology
kothandaraman nagar
dindigul-624622.