சில உண்மைகள்
மனோதத்துவம் சொல்கிறது..
.. என்று கேள்விப் பட்டதை..
சொல்லும் வரிகள் இவை!
..
நீ காதலித்த உள்ளத்தை
எப்போதும் மறப்பதில்லை..
அது உன்னோடு இல்லாமல்
இருப்பதற்கு கற்றுக்கொண்டு
வாழ்கிறாய்..அவ்வளவுதான்!
..
உன்னிடம் ..தங்கள்
உணர்ச்சிகளை வெளியில்
காட்டி கொள்ளாதவர்கள்..
உண்மையில்..
உன் மீது ..
அதிக அக்கறை
எடுத்துக் கொள்பவர்கள்!
..
உன்னைப் பற்றிய
நல்ல விஷயங்களை
ஆராய்ந்து
அலசுபவர்கள் ..
உன்னை பற்றிய
தவறான தகவல்களை
கேள்வி கேட்காமல்
நம்பி விடுவார்கள்!
..
நீ பிறருக்கு செய்யும் நல்லவைகளை..
நீ நிறுத்தும் வரை பலர்
கவனிப்பதேயில்லை!
..
ஒரு பெண்..
பல ஆண் தோழர்களையும்
மிகச் சில பெண் தோழிகளையும்
கொண்டிருப்பின் ..
மனச்சோர்வும்
கவலையும்
கொள்வதில்லை!
..
இவையெல்லாம்
உண்மைதான் என்று
ஒத்துக் கொண்டால்..
சரி!
இல்லாவிட்டால்..
சாரி!
உங்கள் நேரத்தை எடுத்து கொண்டதற்கு!