சதவிகிதங்கள்
அகிலத்து மனிதரெல்லாம்
ஒன்றிணைத்து
கணக்கெடுத்தால்..
கெட்டவர் போக
மிச்சமாக நல்லவர்
எத்தனை பேர்
என்று பார்க்க ..
நாற்பது சதவீதம்தான்..
இருப்பாரோ என்று தோன்றுகின்றது !
அதில்..
தவறிழைக்கும்
வாய்ப்பு இல்லாத காரணத்தால்
நல்லவராயிருக்கின்ற
பாதியினை நீக்கிவிட்டு
வாய்ப்பிருந்தும்
வழி தவறா
எஞ்சியதோர் மிச்ச
சதவீதப் பேர்களுடன்
மற்றவர்களும்
மெல்ல மெல்ல சேர்ந்திடவே
உயர்ந்திடுமே மனித குலம்!