தாயின் அன்பு

தாயின் அன்பு !!!(அனைத்து அன்னை தெய்வங்களுக்கும் சமர்ப்பணம் )
""""""""""" """"""""""
உண்ணும் உணவில்
உடுத்தும் உடையில்
மட்டுமல்ல....

என் உயிரிலும்
கலந்த தெய்வம்
நீயே அம்மா.....

கல்லோ !
சிறு புல்லோ !
எது தடுக்கி நான் விழுந்தாலும்
உன் நெஞ்சம்
காயம் பட்டுவிடாதோ.......

சாயங்கள் கொண்ட
தெய்வங்கள் ஆயிரம்உண்டு
அன்பால் வார்த்தெடுத்த
அழகுதெய்வம் நீ ஒன்றே !!!

ஒருவேளை மறந்து
நான் உண்ணாவிட்டால்
உன் மனம் படும்
பாட்டை நான் அறிவேன் .....

ஆராரோ தாலாட்டு
ஆயிரம் நீ பாடினாய் !
முந்தானை சேலையில்
தொட்டில்கள் முந்நூறு அமைத்தாய் !
முகத்தின் விழிமூடி
சிறுஉறக்கம் நான்கொள்ள .....

வார்த்தைகள் இல்லை
உலகின் எம்மொழியிலும்
என்னுயிர் தாயே !
ஏட்டில் உனை எழுத ........

எழுதியவர் : நா.அன்பரசன்.... (14-Nov-14, 3:30 pm)
Tanglish : thaayin anbu
பார்வை : 853

சிறந்த கவிதைகள்

மேலே