உன் நிழலையும் கேளடி

ஒரு முகம் திருமுகம்
நிலவென தினம் வரும்
கவிதையில் இடம்பெறும்
உன் பார்வையால் குறும்படம்

காதலின் சாரலில்
நனைந்திட நினைக்கிறேன்
உன்னை நினைத்தே
தினம் தினம் காய்கிறேன்

ஒரு வரி சொல்லடி
என் காதல் வருமா என
என் கவிதை நீயடி
உன் நிழலையும் கேளடி

என்றுமே ஒரு வரம்
மனதிலே ஒரு தரம்
வருவதே காதலாகும்
வந்த பின்னே சாக தோணும்

நீ வெறுக்கவும் மறுக்கவும்
விருப்பங்கள் உனக்குண்டு
என் சிரிப்பையும் அழுகையும்
உன் பதிலிலே நிலைப்பதுண்டு

என் தேவதையாய் வந்திடு
என் காதல் வாழவே
இல்லையெனில் சொல்லிடு
மறுகணம் சாகிறேன்

எழுதியவர் : ருத்ரன் (14-Nov-14, 3:29 pm)
பார்வை : 115

மேலே