இயங்காது இயங்குகிறேன்
உன் வார்த்தையெனும்
சுவாசமதை பருகாமல்
அடிக்கடி மூச்சடைக்கிறது.... இப்போதெல்லாம் !
உனைவிட யாரும் எனை
புரிதல் கடினமென நினைத்தேன்...
நீயோ காரணங்களை காரணம்
காட்டியே காயம் செய்கிறாய்
தவிர்த்தல் என்ற பெயரில்
மன்னித்திடு
பொய்யாய் வாழ உன்னிடமே
கற்றுக்கொண்டேன்...
வார்த்தைகள் விழுங்கும் உன் மௌனம் உடை
அன்பு தோய்ந்திருந்த உன் பகிர்தலின்...இப்போதெல்லாம்
வெறுமை வெளிப்படும் காரணம் உடை
உன்னில் எனையுணர்த்தும் அருகாமை
தொலைந்த நிமிடங்கள் உடை
வாழ்க்கை எனும் பொய்யில்...
நீ உண்மை என தான் உணர்கிறேன்
உன் இயல்பு வாழ்க்கை தொலையும் நாட்களில்
என் இயல்புநிலை இழந்திட்ட காரணம் தேடி!
முடிந்தால் சரிசெய்
என் வார்த்தைகள் உனக்கு
வலி தந்தாலும்,
நீ என் உயிர் திண்ற வலியின்
மீதம் இதுவென்று குறிப்பிடுகிறேன் !
தொடர்வேன் வலித்தாலும்
இப்படியே என் நிமிடங்களை
உன் நினைவோடு....