15-10-14-கே இனியவனின் கவிதை 220105-இன் கருத்திலே பூத்த கவி
220105-கே.இனியவனின் பதிப்பான'இசை-தெரிந்துகொள்வோம்' படித்தபோது, எழுந்த எண்ணம்:
இசை..
இன்னிசைச் சுரங்கள் ஏழும்
==எண்ணிலாப் பண்கள் கூட்டும்!
தன்னிலை மறக்கச் செய்யும்;
==தவிப்புகள் அடங்கிப் போகும்!
முன்னுள பொருளி லெல்லாம்
==முன்பிலா அன்பு தோன்றும்;
வன்மமும் கழிந்து போகும்!
==வரமிதன் வழிசெல் லல்தான்!
==================================== ==