சிந்தனை துளிகள்

அடர்ந்த காடுகள் அல்ல வாழ்க்கை !
ஆனந்தமான பரந்த வானம்
இன்னல்கள் இங்கும் அங்கும்
இடையே தாமரை மலர்கள் !
உயர்ந்த சிந்தனைகளால்
உயர்வு நிச்சயம் !
ஊர்ந்து சென்றாலும்
ஊக்கத்தை கை விடாதே !
எது நடந்ததோ அது
நன்றாகவே நடந்தது !
விழுந்தாலும்
எழுவோம் வெல்வோம் !
ஏளனங்களை
எள்ளி நகையாடு!
துன்பங்களின்
இரு மருந்துகள்
காலம் !
மௌனம் !
இயற்கையுடன் ஒத்து வாழ் நீ
இயற்க்கை காட்சியாய் ரசிக்கப்படுவாய் !
மனிதனாய் இரு !
மனித நேயத்துடன் செயல்படு!
எண்ணங்களே
ஏற்றமிகு வாழ்க்கை !
=கிருபா கணேஷ் =