எடுத்து வைக்கும் முதல் அடி

எடுத்துவைக்கும் முதல்அடிதான்
பயணத்திற்கு தொடக்கமாகும்

நினைக்கின்ற முயற்சிதான்
வாழ்க்கைக்கு வித்தாகும்

தொடருகின்ற பாதைதான்
பயணத்திற்கு முடிவாகும்

எடுக்கின்ற முயற்சிதான்
வாழ்க்கைக்கு முத்தாகும்

அடுத்தடுத்து வரும் பயணங்கள்தான்
புதுஉலகம் படைத்திடும்

விடாது எடுக்கின்ற முயற்சிதான்
வாழ்வின் பக்க பலமாகும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (16-Nov-14, 4:03 pm)
பார்வை : 258

மேலே