என் காதல்

தோழியா? இவள் காதலியா?
எத்தனை முறை என் இதயத்தின் இம்சைசப்தங்கள் ?
சில பேர் மேல் மட்டுமே பார்த்தவுடன் காதல் வரும்.
எனக்கும் வந்தது உன் மேல்.
நீ முதல் வார்த்தையிலேயே முட்டுக்கட்டை போட்டாய் "எனக்கு காதல் பிடிக்காதென்று"
அலைகளின் ஆவேசதிருக்கு பனியால் போட முடியுமா தடை?
அப்படித்தான் என் காதலும் இருந்தாலும் முயற்சித்தேன் உண்மையாய்

உன்னை முதல் முறை பார்த்ததில் இருந்து
நேற்றைக்கு உன் இதழ் படிந்த தேநீர் கோப்பைவறை
ரகசியமாய் வைத்திருக்கிறேன் எனது நாட்குறிப்பில்.........

நீ கசக்கி தூக்கி போட்ட காகிதங்கள் இஸ்திரி பெட்டில் இடிபட்டு
நிமிர்த்திய நேரங்கள் முட்டாள்தனமாய் இருந்தாலும் சுகமாய் தான் இருந்தன.

உனக்கு முறையை நகம் கடிக்க கூட தெரியாது இருந்தாலும்
என்னை மட்டும் உன் கண்கள் செல்லமாய் கடிக்க கற்றுகொண்டது எப்போது?

ஒரு நாள் குளிரில் மறுநாள் வெயிலில் பாலைவனமும் பனிபுயலும் எனதருகில்
செல்லமான கோபத்திலும் நச்சரிக்கும் புன்னகையாலும்

மௌனதிர்க்காகவே பிறந்தவள் நீ என நினைத்தேன் முதலில்
இல்லை
நி பிறரை மௌனமாக்க பிறந்தவள்
கடல் சத்தத்தில் மீன்களின் சத்தம் முறையானது தானா?

எனக்கும் ஏக்கம் வரும் உனது தூக்கங்கள்
எனது தோல் மீது இல்லாத போது கொடுத்து வைத்தது உனது மேஜை மட்டும்
பொறாமையால் இடம்மாற்றினேன் ஆனாலும் அது என்னிடத்தில்

2010 லிருந்து அதிகாலை அர்த்தம் புரிந்தது
உனக்காய் நான் தொடங்கிய விரைவு சேவை தொடர்வண்டிபயணம் .

வேண்டுமென்றே தீண்டீருக்கிறேன்
உன்னை
என் சுவாசத்தால் மட்டுமே

நான்கு ஆண்டில் எனக்கு எந்த ஒரு பெண் தோழியும் உண்டானதில்லை
நீ அதை உருவாக்கவிட்டதுமில்லை சுமாரான பெண்ணாய் இருந்தாலும் சரி
அவள் உன் கண்களுக்கு மட்டும் தேவதை ஆகிறாலோ என்னவோ அப்பறம்
எதற்கு அத்தனை கோபம்
செவ்வானத்தில் சிவந்த மேகங்களை போல அவ்வபோது பார்த்திருக்கிறேன்
உன் கன்னக்குளியில் என் காதலை

நீயும் நானும் திரைப்படம் போகும் வாய்ப்பு மட்டும் எனக்கில்லை
அது கூட ஒரு வேலை நல்லதுதான் படத்தை பார்க்காமல்
உன்னை பார்த்திருந்தால் நி கண்டு பிடித்திருப்பாய் என் காதலை

ஒரு ரயில் பயணத்தில் நன்றி சொன்னான் பிச்சைகாரகுருடன்
பாவம் அவனுக்கு தெரியவில்லை விழுந்தது சில்லறையல்ல
உன் சிரிப்பென்று

நெருக்கமான நண்பர்கள் எத்தனை முறை கேட்டனர் உனக்கும் எனக்கும் காதலா என்று?
எத்தனை முறை சமாளிதிருகிறாய் உனது இதழ்களை வருத்தி வெறும் நட்புதான் என்று

என் பிறந்த நாளுக்கு நீ பரிசாய் கொடுத்த பொருள் மறந்து பொய் வைக்கிறேன் பூஜையறையில்

ஒரு பரிசு பொருள் மட்டுமே நி கொடுத்ததை நினைதாய்
அதன் மேல் சிக்கிருந்தது உனது துளி நீள மயிர்
நான் தூக்கில் தொங்ககூட போதும்
முடிமோதிரம் கிடைத்ததென்னவோ? அது தான் முதல் முறை

உன்னையும் என்னையும் பிரிக்க எத்தனை பேர்
நிலவும் சூரியனும் ஒரு வானில் தான்
பாமரர் களுக்கு எப்படி தெரியும் அது பகலில் தெரியாதென்று?

நீ மறந்தாலும் மறந்திருக்கலாம் நியும் நானும் காற்றில்லாத
அந்த மீதிவண்டியை தள்ளி போன பாதையை நான் மறக்கவில்லை
தினமும் இரண்டு நடைபயிற்சி அந்த பாதையில்தான் புன்னகையுடன்

உன் பிறந்த நாளுக்கு பரிசு எதுவும் வேண்டாமென்று சொல்லிவிட்டாய்
நல்லவேளை உனது அழகிற்கு இவ்வுலகில் கொடுக்க ஏதும் பிறக்கவிலை என் அற்ப உயிரை தவிர

விடுமுறை நாட்களில் உனது புகை படங்கள் மட்டுமே எனக்கு பாலைவனதேன்
இருந்தாலும் சிலநேரத்தில் அது கண்நீற்படலமாயே

அறிவியல் வளர்ச்சியை இப்பொழுது மட்டுமே வெறுக்கிறேன்
எனது செல்போன் சிக்னல் மட்டும் குறையும் பொது பரிதவிக்கிறேன்
உனது பதிலுக்காய்

எத்தனைமுறை பிடிங்கிருகிறாய் உனக்கு பிடித்த பொருள்களை எல்லாம்
ஆனால் தர நினைக்கும் இதயத்தை மட்டும் தனிமையில் விட்டு

என் ஜாதி சான்றிதளுக்கு ஜனாதிபதி விருது கிடைத்து
நியும் நானும் ஒரே ஜாதி என்று தெரிந்ததும் நானும் ஜாதி மூர்கனானேன்
உனது பெற்றோரை போல்

கவியரசு உனக்கு பிடிக்கும் என்று தெரிந்தவுடன் நானும் பொயயரசனனேன்
பிறர் கவிதைகளை நசுக்கி நகலக்கும்போது

எத்தனை முறை உன்னிடம் பொய் பேசீருக்கிறேன்
அத்தனை பாவமும் உனக்கு மட்டும் தான்

1000 பெண்களுக்கு மத்தியிலும் உன்னை எழுதி காணமுடிகிறதே
நீ அக்னி பிரவேசமா?இல்லை பனி பிரதேசமா?

எனது துக்கங்கள் தெரிந்த உன் கண்களுக்கு
எனது தூக்கம் மறந்த கதை தெரியவில்லையா?
இப்பொழுது வரை என் காதலை சொள்ளதடையாய் நம் நட்பு அதனால்
தான் சில தடுமாறும் வார்த்தைகளும்

எத்தனைமுறையோ வேண்டீருகிறேன் கடவுளிடம்
காதலுக்காக அல்ல உன்னுடன் நகரும் கனம் நீடிக்க
உதாரனமாய் ஒரு நிகழ்ச்சி கல்லூரி கேண்டீன்
உனது கைவசம்மாகும் நேரம்
உனது சின்ன சிற்றுண்டி கிண்ணம்
அட்ச்சயபாத்திரமாய் மாற வேண்டியிருக்கிறேன்

நட்பை கரணம் காட்டி காதலை கலைக்காதே
எதிர்பாராமல் வருவதுதான் காதல்
ஏமாற்றாமல் இறுப்பது தான் நட்பு
இரண்டையுமே வாழவைத்துவிடு உன் வார்த்தைகளால்
மூன்றாவதை என்னையும்

எழுதியவர் : சந்தானபாரதி (16-Nov-14, 8:10 pm)
சேர்த்தது : santhanabharathi
Tanglish : en kaadhal
பார்வை : 356

மேலே