உணர்வுகளின் ஊர்வலம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒளிவெள்ளம் சூரியன் கொடுக்க
மலைகள் அதை அழகாய் தள்ள
குயில்கள் கூவும் கூச்சல் கேக்க
மரங்கள் மெதுவாய் காற்றில் ஆட
மனிதன் அழகாய் எழுந்து அமர
வானத்தில் மேகம் விரிந்து கிடக்க
அந்தி வானம் அமைதியாய் ஊட
அருவியில் தண்ணீர் அழகாய் விழ
பறவைகள் வானில் பறந்திட
இலைகள் மெதுவாய் ஆட
என் கண்கள் எத்தனையும் கண்டிட
என் நெஞ்சம் வேகமாய் துடித்திட
என் உடல் முழுதும் உறைந்திட
இதுவே அழகு என்று எடுத்து காட்ட
எந்த பூமியில் என்னை பூத்திட செய்தாயோ ....?!