நினைவிருக்கிறதா
நினைவிருக்கிறதா அன்பே நினைவிருக்கிறதா
உனைப் பெண் பார்க்க வந்தபோது
நீ பார்க்காத சமயத்தில்
உன்னை நானும்,
நான் பார்க்காத சமயத்தில்
என்னை நீயும்,
யாரும் நம்மைப் பார்க்காத சமயத்தில்
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தோமே
நினைவிருக்கிறதா?
முதன் முதலாக
உன்னோடு தொலைபேசியயூடாக
உரையாட முற்பட்டபோது
எதுவுமே பேசமுடியாமல் விக்கித்த என்னை
நீயே பேச்சைத் தொடக்கி
எனையும் பேச வைத்தாயே
நினைவிருக்கிறதா?
முதன் முதலாக உன்னோடு ஊடல் கொண்டு
பேசாமல் விட்டு விட்டு
மறுநாளுக்கு மறுநாள் தொடர்புகொண்டபோது
நேற்று
என் வீட்டுத் தொலைபேசி சிணுங்கிய போதெல்லாம்
நீங்கள்தான் என நினைத்தேன் என்றாயே
நினைவிருக்கிறதா?
அன்று உன் வீட்டுக்கு நான் வந்தபோது
சமையல் கட்டுக்குள் நீ
தனித்திருந்த சமயத்தில்
கை கழுவுமும் சாக்கில் உனைக் காண
வந்த என்னைக் எண்டு நீ விலக
என்ன பயமோ? என நான் கேட்க
என்ன பயம் என்றுவிட்டு அருகில் வந்தாயே
நினைவிருக்கிறதா?
உன்னிடம்
தொலைபேசியயூடாய் முத்தம் கேட்டபோது
நேரில் கேளுங்கள் நிச்சயமாய் தருகிறேன் என்றாய்
நான் கேட்கமாட்டேன் என்ற துணிவில்
நான் நேரில் உன்னை கேட்டபோது
செல்லமாய் இல்லையென்றுவிட்டு ஒழிந்துகொண்டாயே
நினைவிருக்கிறதா?
எதுவெல்லாம் பிடிக்காது
என நான் கேட்போது
எல்லாம் பிடிக்கும் என்றுவிட்டு
பின்னர்
பிடிக்காதவற்றின் பட்டியல்
மடல் மூலம் அனுப்பிவைத்தாயே
நினைவிருக்கிறதா?
என் பெயரை
ஒருமுறை சொல் எனக்கேட்டபோது
கட்டிக்கப்போறவர் பெயரைச்
சொல்லக்கூடாது என்றுவிட்டு
என் இம்சை தாளாமல்
பல நாள் வேண்டுதலின் பின்
என் பெயா் சொல்லி எப்பிடிடா இருக்கிறாய்
எனக் கேட்டு இன்ப அதிர்ச்சி தந்தாயே
நினைவிருக்கிறதா?
சின்ன வீடா வரட்டுமா?
பெரிய வீடா வரட்டுமா?
என்ற பாடல் உனக்கு பிடிக்கும் என்றபோது - எனக்கு
எந்த வீடா நீ வரப் போகிறாய் என்று நான் கேட்டதும்
பொய்க் கோபத்தோடு
உங்களுக்கு இரண்டும் நான்தான் என்றாயே
நினைவிருக்கிறதா?
செல்லம்
என்னெடி செய்கிறாய்?
என நான் கேட்ட போதெல்லாம்
என்ன?
என்று விளங்காததுபோல்
மீண்டும் ஒருமுறை கேட்டிடத் துடிப்பாயே
நினைவிருக்கிறதா?
உனக்கு
என்னவெல்லாம் சமைக்கத் தெரியும்
என நான் கேட்டபோது
அது இது என ஒரு பெரிய
உணவுப் பட்டியலையே நீ அடுக்கிச் செல்ல
இதெல்லாம் சாப்பிடத் தெரியுமா
என்று நான் கேட்கவில்லை
சமைக்கத் தெரியுமா எனத்தான் கேட்டேன் என்ற போது
கல கலவெனச் சிரித்தாயே
நினைவிருக்கிறதா?
தொலைபேசி உரையாடலில்
உன்னிடம் வரட்டுமா
எனக் கேட்டால்
ம்.. வாங்கோ என்பாய்
உண்மையிலே நான் வந்தால்
என்ன செய்வாய் எனக் கேட்டால்
யார் நீங்கள்.. எனக் கேட்டு
வீட்டில் ஒருத்தரும் இல்லை
என்று சொல்லி அனுப்பி விடுவேன் என்றாயே?
நினைவிருக்கிறதா?
அம்மாவோடு அப்பாவோடு
அண்ணாவோடு அக்காவோடு:
தம்பியோடு
ஏன்?
எல்லோரோடும் பிடிவாதம்
பிடித்துக் பேசாமல் இருப்பேன்
உங்களோடு அது முடியவில்லை
என்பாயே அப்பாவியாக
நினைவிருக்கிறதா?
நீ பல வருடங்களுக்குப் பிறகு
என் வீட்டுக்கு வந்திருந்த
அந்த நவம்பர் மாத
மழை நாட்களை
உனக்கு
நினைவிருக்கிறதா?
நீ மணியக்கா வீட்டுக்கு போகணும்"
என்றதும் நான் கடை கடையாகத் தேடி
கேரியர் இல்லாமல் எடுத்து வந்த
வாடகை சைக்கிளை