வாழ்க்கை வாழ்வதற்க்கு

உயிருடன் இருப்பதல்ல வாழ்க்கை
உயிர்ப்புடன் என்றும் இருப்பது.
தொடங்குவதில் அல்ல வாழ்க்கை
தொடர்வதில் என்றும் இருப்பது.
இருள் மறையும் பொழுது ஒரு எதிர்பார்ப்பு
இருள் சூலும்பொலுது ஒரு அனுபவம்.
அமைந்த வாழ்க்கையை ஏற்ப்பவனாகாதே
வாழ்க்கையை அமைத்து கொல்பவனாகு.
வாழ்க்கையில் காலத்தை வீணாக்காதே
காலத்தால் செய்யப்பட்டதே வாழ்க்கை.
வாழ்வதற்க்கு வாய்ப்பை உருவாக்குபவனாகு,
வாழ்க்கையை உயர்வாக்குபவனாவாய்.
ஆழப் பழகு அமிழ்ந்து விடாதே
வாழப் பழகு வழுக்கி விழுந்துவிடதே.
வாழ்க்கையை வெறுப்பவனாகாதே,
எந்நொடியும் வாழக் கற்றுக்கொண்டு
எந்நொடியும் ரசித்து வாழ்பவனாகு.
வாழ்க்கையை வாழ தன்னம்பிக்கைகொள்,
வாழ்க்கையில் இழப்பென்பதில்லை.
வாழ்க்கையில் வலிமை பெற அறிவானவனாகு,
வாழ்க்கையில் முழுமை பெற அன்பானவனாகு.
தடைகளை வென்று வாழ்பவனாகு
வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருபவனாவாய்..................


ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப்பக்கல்லூரி

எலம்பலூர் , பெரம்பலூர்

எழுதியவர் : ப.கலியமூர்த்தி (17-Nov-14, 9:52 pm)
பார்வை : 155

மேலே