வாழ்க்கை வாழ்வதற்கு

விருப்பமில்லா வாழ்க்கை
____வெறுப்பது என்பது சரியே!

வெறுக்கும் வாழ்க்கை
____விரும்பி ஏற்பதே முறையே!!

திரும்பி செல்ல
____திசைகளில்லை வாழ்க்கைக்கு!!

அருவிகளின் திசையாய்
____அனைவரின் வாழ்க்கை!!

எல்லோருக்கும் காலம்
____எளிமையாய் அமைவதில்லை!!

நல்லதென சிலருக்கும்!
____கெட்டதென சிலருக்கும்!

இல்லாமல் போவதும்
____இல்லை! என்றும்!!

அனைத்தும் மாறும்
____அனைவருக்கும் இது நிகழும்!!

வல்லமை உண்டு
____இங்கு அனைவருக்கும்

வரும் எதிர்ப்பைக்கடந்த
____வாழ்க்கையை வாழ்வதற்கு!!!




ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்

எழுதியவர் : பாபு (17-Nov-14, 9:51 pm)
சேர்த்தது : தினேஷ்பாபு ஏ ரா
பார்வை : 125

மேலே