கல்வி முறையில் மாற்றம்

காலம் மாறும்!
____கவிநயம் மாறும்!
மாறுதல் என்றும்
____மாறது இருக்க!
மாற்றங்கள் உண்டு
____இன்றும் உலகில்!!

நாம் கற்றக்கல்வி
____நாளைய தலைமுறைக்கு!
நல்லதென வரலாற்று
____பாடங்களில் மட்டுமே!!

புதுப்புது படைப்புகள்
____தினந்தினம் இங்கு!!
புத்தகங்களை நிரப்புவது
____வாடிக்கை என்றானது!!

புறக்கணிக்க முடியாது - என்றும்
____புத்தகத்திலிருந்து பாடங்களை!!

மாற்றியமைக்க வேண்டும்!!
____புத்தகத்தை அல்ல!!
மாறாத கல்வி
____முறையே இங்கு!!!



ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்

எழுதியவர் : பாபு (17-Nov-14, 10:16 pm)
பார்வை : 484

மேலே