வளமான எதிர்காலம்
வளரும் தலைமுறைகள்
____வளர்ச்சியில் செல்லும்!
இளம் கன்றுகளை
____இந்திய நாட்டில்!!
சொர்க்கமென மாறும்
____சொந்த நாடு!
மரம்செடிக் கொடிகளோடு
____மலராய் நாம் இங்கு!!!
எதிரிகள் இல்லாத
____எதிர்காலம் அமையும்!
சிதறி உடையும்
____வினையெல்லாம் நாட்டில்!!
இதர தீங்கெல்லாம்
____மாறும் நல்லதென!!!
வளமாய் இருப்போம்
____வாழும் நாட்களிலே!
வரும் காலத்தில்
____அசையாமல் செல்வோம் !!!
ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்