உன்னை சிந்தித்தால்

விண்வெளியை வடிவமைப்பாய்! - உனை
____விஞ்ஞானியாய் நீ நினைத்தால் !!

கண்ணில் கவித்தீட்டுவாய்! - உனை
____கவியாய் நீ உணர்ந்தால்!!

எண்ணகளில் எழுத்தாள்வாய் !- உனை
____அறிஞனேன நீ அறிந்தால்!!

அன்பை தோன்றுவாய்! - உன்
____பண்பை நீ அறிந்தால்!!

இன்பம் காணுவாய்! - உன்
____இயல்பை நீ உணர்ந்தால்!!

தீயென தெரிவாய்! - உன்
____திறமையை நீ உணர்ந்தால்!!

உண்மையான உலகைக்கானுவாய்!!
____உன்னை நீ சிந்தித்தால்!!!



ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்

எழுதியவர் : பாபு (17-Nov-14, 11:09 pm)
பார்வை : 496

மேலே