தாய்-தந்தை அன்பு

என் சிரிப்பிற்காக உலகத்தில் எதையும்
செய்ய நினைக்கும் உன் உணர்விற்கு பெயர் என்ன....!!!!
என் கண்ணில் நீர் வழியும் போது -உன்
மனதை வாள் கொண்டு அறுப்பது போல் வலி உணர்கிறாயே
இந்த வலிக்கு பெயர் என்ன...!!!!
மெழுகுவர்த்தியாய் நீ கரைந்து -என்
வாழ்க்கையை பிரகாசமாக்க நினைக்கிறாயே
இந்த நினைவுக்கு பெயர் என்ன ....!!!
என் பசிக்காக உன் குருதியையே உணவாக்குகிராயே
இந்த உணர்விற்கு பெயர் என்ன...!!!!
நான் பசியாறுவதைப் பார்த்து மனநிறைவுடன்
தண்ணீரை மட்டும் உனக்கு உணவாக்குகிராயே
இந்த உணர்விற்கு பெயர் என்ன...!!!!
நீ மட்டும் போதும் இந்த உலகத்தில் என்று நினைக்கிறாயே
இந்த உணர்விற்கு பெயர் என்ன..!!!
தாய் கருவில் சுமந்தால்,நீ என்னை தோளில் சுமந்தாயே
இது தான் பாசமா அல்லது தியாகமா ???
இந்த தியாகிகளுக்கு சிலை எடுக்காவிடிலும்
சேலை எடுத்து கொடுக்கலாமே ...!!!
உறக்கத்தை தியாகம் செய்தவர்களுக்கு
உண்ண உணவு கொடுக்கலாமே ..!!!
மனதில் இடம் கொடுத்தவர்களுக்கு -நம்
வீட்டில் ஓரத்தில் ஓர் இடம் கொடுக்கலாமே ..!!!
பொக்கிஷமாய் நம்மை நினைத்தவர்களை
பொதி சுமையாய் நினைக்கிறோமே
இது தான் பாசமா ???
நம்மை காத்த பெற்றோரை காக்காமல்
காப்பகத்திற்கு அனுப்புகிறோமே ...!!!!
இது தான் பகுத்தறிவின் பலனா ??????

எழுதியவர் : ஹேமா முருகன் (17-Nov-14, 11:50 pm)
பார்வை : 363

மேலே