கண்ணனின் தோழன்

கண்ணனின் தோழன்

போர்முனையில் மதி கலங்கி
காண்டீபம் தனை எறிந்து
நிலத்தில் நிற்பவனே ..!

அர்ச்சுனா!..

நிலம் பிளவு பட்டே இருக்கிறது..
பிளவு படுத்துபவன்
பிளந்து இருப்பதில் சுகம் காண்பவன்
சகுனியைப் போல !

வீரன் வெற்றியை மட்டுமே
கொண்டாடுவதில்லை..
தோல்விகளுக்கு கூட
சாமரம் வீசுகிறான்..
பாடம் கற்றுக் கொடுத்ததற்காக..!

அற்பன் அகமகிழ்கிறான்..
அகிலமே தன் காலுக்கு கீழே என்று..
தரையின் மேல் நடக்கும் போது!
அந்த மண்ணே அவனை
அடக்கிக் கொள்ளும் ஒரு நாள்
என்பது அறிந்திடாமல்
கௌரவர் போல !

சுதந்திரமானவன் என்று சொல்லி
பிறர் மூக்கினை இடித்து
கை வீசி நடப்பவன்
தன் முக்குடையும் போது
எரிமலையாய் வெடிக்கிறான் ..
துரியோதனன் போல !

ராஜ பாட்டைதனில் நடந்து செல்லும்
அப்பாவி மாந்தரின் மேல்
சாக்கடையில் நின்று கொண்டு
கால் உதறி நீர் தெளிப்பான்..
களிப்புடனே பின் அமைதி கொள்வான்
துச்சாதனன் போல !

கடிவாளப் பார்வையுடன்
கண்டதே காட்சியென்று
ஒரு கோட்டுக்குள்
உலகம் காண்பான் ..
தர்மம் காணான்..
கண் மூடிக்கொண்டு
இரவு வந்து விட்டதென்பான்..
கர்ணனை போல !

சாத்தான் ஓதும் வேதமென அவர்
சந்து முனை சிந்துகளை..
எள்ளி நகையாடல்களை ..
சற்றேனும் செவிமடுக்கா
சார்பில்லா நடுவுநிலை நீ கொண்டு
முன்செல்வாய்..என் தோழா..
கடமையினை கருத்தில் வைத்தே
கண்ணனின் தோழனாக !

எழுதியவர் : கருணா (18-Nov-14, 10:55 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : kannanin thozhan
பார்வை : 78

மேலே