அவளுடன் ஓர் பயணம்

அவளுடன் ஓர் பயணம்!!!
சுதா..... சும்மா சொல்லகூடாது...... சும்மா சூப்பராதான் இருப்பாள்......
சுதா..... சுதான்னு... சும்மா அவளையே.... சும்மா கத்திக்கிட்டே......
இருந்தவன் தான்....சாமு...
நாலு வருஷம் அவள் பின்னாலே சுத்துபோட்டு பிடித்தவன் தான்..... சாமு....
தாய் வழி உறவுன்னு.......சுதாவை சொந்த உறவிலேயே கட்டி கொடுத்தார்கள்...
ஆரம்பத்திலேயே வேணாம்ன்னு முனு முனுதாள்....
விதி அவள் வாழ்க்கையில் விளையாடி விட்டது....
அவள் வாழ்க்கையில் வந்தவன் தான்.....
கருணா......கருநாகமாக தான் அவளை தீட்டினான்........
தாம்பத்தியமே கசந்து போய் நின்றது.... பிரச்சனைகளுடன் அவளின் முதல் வாழ்க்கை முற்று புள்ளியாய் முடிந்தது... சுதாவுக்கு.....
அவள் அவனை ஒதுக்கி விட்டு தனி மரமாய் வாழ தொடங்கினாள்....... சுதா....
இதற்க்கு இடையில் புகுந்தவன் தான்..... சாமு.....
தன்னைப் பற்றியும் தான் குடும்ப வாழ்க்கை பற்றியும் துல்லியமாய் அவள் முன் வைத்தான்..... சாமு.....
என் மனைவி சரியான கறுப்பி ..... பெண் என்ற ஒரு லச்சனமும் அவளிடம் இல்லை..அவளை பார்க்கவே பிடிக்க வில்லை....
அவள் எந்த வகையிலும் என் மனைவியாய் வாழ எந்த தகுதியும் அவளிடம் இல்ல சுதா...........
எனக்கு அவள பார்க்கவே பிடிக்கல...என்ன செய்வது ரெண்டு குழந்தைக்கு தாயின்னு....வச்சு வாழ்த்திட்டு இருக்கேன்....இந்த வாழ்கையை நானே தேடிகிட்ட வாழ்க்கை சுதா....
அதனால வீட்டுல யாரு கிட்டேயும் பேசி தீர்க்க முடியாம தவிக்கிறேன்....
சின்ன வயசுல எது நல்லது.. எது கெட்டதுன்னு தெரியாம காதலிச்சு.....பருவத்தில் பயிர் செய்ததை இப்ப அனுபவிக்கிறேன்....
நீ வேணும்னாலும் எங்க வீட்டுக்கு ஒரு முறை வந்து பாரு..........என.....
ஒருமுறை சுதாவிடம் தன் மனைவி கீதாவை அறிமுக படுத்தி வைத்தான் சாமு....
பட்டுன்னு பார்த்ததும் சாமு வீட்டு வேலை காரியா என்று கூட எண்ணினாள்.. சுதா....
அவளை பார்ப்பதற்கே.......... சரியான கருங்குரங்கு....... அவளின் பல்லும் முகமும் காண சகிக்காத ஒரு முகம். அவன் சொன்னது எல்லாம் உண்மையாக இருந்தது... என்று தன் மனதிற்குள் எண்ணியவளாய் சுதா.. அவனிடம் விடை பெற்று வெளியேறினாள்..... அவன் வீட்டை விட்டு....
ஏறக்குறைய அவளின் வாழ்க்கையில் ஏற்பட்ட எல்லா துன்பங்களும்...
சாமுவின் வாழ்க்கையிலும் இருப்பதை கண்டாள் சுதா.....
இல்ல.... சாமு நம்ம இரண்டு பேரு வாழ்க்கையும் ஒரே மாதிரி துன்பங்களுடன் வாழ்கை கடந்து போய் கொண்டு இருக்கோம்.....
நீங்களும் மனைவி இருந்தும் சுகமான தாம்பத்தியம் இல்லாம தவிக்கிறீங்க.... ஒரு இன்பமான வாழ்க்கையும் உங்களுக்கு இல்ல...
நான் கணவர் இருந்தும் வாழ்கையே இல்லாம துடிக்கிறேன்....
ஏதோ எனக்கு நீங்க கணவனாக இல்லாவிட்டாலும் எனக்கு துணைவனா இருந்தா போதும் சாமு.... ஏன்னா.... என்னால தெருவில் நடக்க முடியல.....
எல்லோர் கண்களுக்கும் நா விருந்தா இருக்கிரதை விட உங்க கண்ணுக்கு மட்டும் விருந்தாகவும், மருந்தாகவும்... இருக்கலாமுன்னு ஆசை படுகிறேன் என்று தன் மனதில் உள்ளதை அவள் முன் வைத்தாள்.....
இதற்காக தான்னே..காத்திருந்தான் சாமு. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது சாமுவுக்கு.......
அவன் கைக்குள் அவள் கடிவலமாய்...ஆகி போனாள்...
அவள் அப்படி பேசும் அளவிற்கு..அவன் அவளை தயார் படுத்தி விட்டான்...சாமு......
இப்படி பாதிக்க பட்ட பெண்களை அவன் வசைபடுத்துவது இது என்னா அவனுக்கு புதியதா??
இது இவனுக்கு கை வந்த கலையாச்சே......
சாமு அவள் முன்பு யோசிப்பது போல் நடித்து...... கண்ணீர் சிந்தியவனாய்.....தயக்கத்துடன்......
தன் மனைவி கீதாவுடன் தன் மனம் ஏற்காத வாழ்க்கைக்கு.....முற்று புள்ளியும்..... தொடர் புள்ளியும்.... வைத்து விட்டு தன் மனதை சுதாவிடம் அடகு வைத்தது போல் அவளிடம் கொடுத்து விட்டான்...... அவனின் அனுமதி இல்லாமல் வெளியே எங்கும் போக மாட்டாள்....
சுதா தேடிய வாழ்க்கை கிடைத்து விட்டது அவள் மனதில் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று நினைத்தாளோ... அப்படி எல்லாம் சுகமும் சந்தோசமும் ஒன்றாய் கிடைத்தது. சாமுவிடம்......
அத்தனைக்கும் ஒற்றுமையாய்....சந்தோசமும்... உடலும் மனதும் ஒன்றாய்தான் இருந்தது....அவர்களின் வாழ்க்கையில்.....
அவனுக்கு பிடித்த சமையல் தான் செய்து வைப்பாள் சுதா....
அவன் மனைவி கிதாவை விட சுதாவுக்கு தான்....அவனின் தேவைகள் தெரியும்....
எல்லாம் ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டாள்... சுதா... சீயற்காய் தேய்த்து இளம் சூடுவென்னீரில் குளிப்பாட்டி விடுவாளோ.....
ஒரு குழந்தையை அரவணைத்து போல் தான் இருக்கும் அவளின் எல்லா காரியமும்...
சாமுவும்.அவள் தன் முதுகை தேய்த்துவிட.....அந்த ஞாயிற்றுக்கிழமை வராதா?.....என்று எதிர் பார்த்து ஏங்கி தவிப்பான்.
உண்மையாகவே அவனை அவள் ஒரு துணையாக கருதாமல் தெய்வமாக நினைத்து அவனின் போட்டோவை கூட சாமிக்கு பக்கத்தில் வைத்துதான் கையெடுத்து கும்பிடுவாள் சுதா............ அத்தனை அன்பை அவள் அள்ளி அவன் மீது தெளித்திருந்தாள்......
அனால் அவனின் மனதை புரிந்து கொள்ள தான் அவளாள் முடிய வில்லை...
தேனீ மலர்களில் உள்ள தேனை உறுஞ்சும் வரை தான் தேனீக்கள் அந்த மலரை சுற்றி வரும். தேன் அந்த பூக்களில் தீர்ந்துவிட்டால்... அந்த பூவை அந்த தேனீக்கள் திரும்பிக்கூட பார்க்காது......
அது போல தான் சுதா ஒரு பூவாகவும்.... சாமு தேனீயாகவும் சுற்றி வந்தான். அவளை.....
இவன் தேன் குடிக்க வந்த தேனி என்று தெரியாமல் போய் விட்டது இவளுக்கு....
வந்தவனும் சரியில்ல...........
வாச்சவனும் சரியில்ல..... என்று தன் மனதுக்குள் ஒரு போராட்டம் நடந்தது......சுதாவுக்கு.
போனமாசம் கூட ஏதோ அவசர பணம் தேவை என்று சாமு பணத்திற்கு அல்லாடிய போது தன் கழுத்தில் கிடந்த முனு பவுன் செயினை கழட்டி அவள் கேட்காமலே கழட்டி கொடுத்தாள்...... சுதா....
அதில் தொடங்கிய போராட்டம் தான்..... முடிவு பெறாமல் தொடர்கிறது.....
அவளின் தற்கால வாழ்க்கையில்.....
அந்த செயினை வாங்கி கொண்டு போன சாமு வருவான் என்று வழி மேல் விழி வைத்து தினமும் வாசலில் வந்து பார்ப்பாள். அவளின் பார்வை கேள்விக்குறியை சுமந்து தான் அந்த தெருவில் நிற்கும்...
சாமு இப்படி ஒரு வஞ்சகன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை சுதா.........
போக....போக.... தான். சாமுவின் வரலாறே தெரிகிறது.... சரியான பொம்பள பொருக்கி.....இவன் சுகம் தீரும் வரை ஒருத்தியுடன் பயணிப்பான்...சுகம் தீர்ந்தால் வழிலேயே இறக்கிவிடும் படும் பாவி.... தீவிரவாதி ஏட்டில் எழுத வேண்டியவர்களில் பெயர்களில் இவனுடைய பெயரும் இடம் பெற வேண்டும்........... என்று.
சாமு தன் மனைவி அழகு குறைந்தவளாக காணப்படுவது.... குறையாக வைத்து...இதை ஒரு காரணம் காட்டி... இவனுக்கு இப்படி தான் பல பெண்களுடன் உல்லாசம்....சல்லாபம்.....பல பெண்களின் வாழ்க்கையில் குருக்கிட்டு தேன் வழிய பேசி வசப்படுதுவது....ஆசையையும், மோகமும்.......தீர்த்து விட்டால் திரும்பி பார்க்காமல்.....சென்று விடுவது தான்.....அவனின் வாழ்க்கையில் வழக்கம்......
இதை எல்லாம் கேள்வி பட்டு சுதாவுக்கு...... சுற்றியது தலை.....தனக்குள் தைரியத்தை வளர்த்து கொண்டு எதிர் நீச்சல் போட தொடங்கினாள்.... தெய்வத்துடன்......
தன் மனதில் குடி வந்ததாக நினைத்து... தன் குடியை கெடுத்து விட்டு போனானே.... சாமு....
அவன் உருபடுவானா?........
இது சுதா வை போல பாதிக்கப்பட்ட பெண்களின் சாபம் தான்......
அரசன் அன்று கேட்டால்....தெய்வம் நின்று கேட்கும்......சுதா தெய்வத்தின் முன்பு அவள் கோரிக்கையை வைத்தாள்.......
குளித்து முழ்கி தெய்வத்தின் முன்பு கண்ணீர் விட்டு கதறி....பிரார்தித்தாள்..
அவளின் கோரிக்கை வீண் போக வில்லை சாமுவின் நண்பர் துரையை ஒரு கோவிலில் வைத்து சந்தித்தாள் சுதா.............
துரை அவளை நோக்கி....... மனம் கலங்கியவனாய்.....சுதா..........
எல்லா விசயமும் எனக்கு நல்லாவே தெரியும். உனக்கு செய்த துரோகத்துக்கு தான் அவனுக்கு யாராலும் கனிக்க முடியாத நோயை அந்த தெய்வம் பரிசா கொடுத்துருக்கான்....... அவன் விதைத்ததை அவனே அறுவடை செய்து கொண்டு இருக்கிறான் சுதா.....
அவனுக்கு எயிட்ஸ்ன்னு பேசிகிறாங்க..அதை பத்தி எனக்கு சரியாய் தெரியல....
நல்ல வேலை நீ அதுல இருந்தது தப்பிச்சுக்கிடயேன்னு.... நான் சந்தோஷ படுறேன்.... சுதா...
அவன் படுக்கையை விட்டு கூட எழ முடியாமல்.... படுத்த படுக்கையாய் இருக்கிறான் சுதா.......
நானும் அவனிடம் நட்பை துண்டித்து விட்டேன்..... என்று அவன் சொல்ல .....
அந்த கோவிலில் உள்ள அம்மனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னவளாய்.
நடையை கட்டினாள்........சுதா............
முற்றும்.