அகமும் புறமும்

நாம் அகம் ,புறம் என்ற இரு உலகங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .புறத்தில் நாம் மற்றவர்களுக்கு எப்படி தெரிய வேண்டும் என்பதை அகமே முடிவு செய்கிறது .மலர்ந்த முகமும் ,மணக்கும் வார்த்தைகளும் ஒரு அழகான அகத்தின் அடையாளங்கள் .அகத்திலிருந்து புலர்ந்து ,புறத்தில் புதுமை செய்யும் புண் முறுவலின் அமானுஷ்ய சக்தியை நாம் கண்டிருக்கிறோம் .அகத்திலிருந்து பொங்கி வழிகின்ற காதல் கண்கள் வழியாய் வழிந்தோடி காதலியிடம் கெஞ்சி ,கடைசியில் கைசேர்ந்த கதைகள் எத்தனையோ ! உள்ளத்தை அன்பு நிரப்பும் போது கைகள் தானாக சென்று ஸ்பரிசிப்பதையும் ,உதடுகள் உவகையை வெளிகொனர்வத்தையும்,உடம்பு சற்றே உஷ்ணமாகி உணர்ச்சி வசப்படுவதையும் ரசித்திருக்கிறோம் .இத்தகைய அபூர்வ இயல்பு கொண்ட மனிதன் ,ஏனோ செல்களை கொல்கின்ற செயல்களையே அதிகம் செய்கின்றான் .அண்மைய ஆய்வுகள் ஆத்திரம் ,பொறாமை, குற்ற உணர்ச்சி, ஆகியவை மனிதனுக்கு பல நோய்களை கொண்டு வருவதாய் சொல்கின்றன .

அகம் புறம் என்ற இரண்டையும் ஒரே மனிதனில் படைத்த ஆண்டவன் ,நல்லதையும் கெட்டதையும் ஆராய்கின்ற ஒரே மூளையை ஒவ்வொருவருக்கும் தனி தனியாய் படைத்திருக்கின்றான் .நல்லவைகளை தேர்ந்து அகத்தில் விதைத்து வாழ்கின்றவனே அழகான மனிதன் .அந்த அழகை புறத்தில் செதுக்கி ,சிலர் மனதில் அழகையும் ,பலர் முகத்தில் புண் முறுவலையும் புதைக்கின்றவனோ புனிதன் .

மல்லிகை ,அதை அப்புறபடுத்திய பின்னும் மணத்தை பின் விட்டு செல்வது போல் ,மானிடன் அழகான மனதையே ,இறுதியில் விட்டு செல்ல வேண்டும் .நாம் மாண்ட பின்னும் ,பலர் மனதில் மணக்க வேண்டும்.
இது மட்டும் நடந்து விட்டால் கண்ணீரும் இல்லை ,கவலைகளும் இல்லை.

எழுதியவர் : புஷ்பமேரி (18-Nov-14, 1:42 pm)
பார்வை : 684

மேலே