இந்தியத் திருநாடு - 3

இந்தியத் திருநாடு - 3

(இந்தக் கட்டுரை, வேலூர் மண்ணில், 'சுட செய்தி' வார இதழில் வெளிவந்தது)

" தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா! "
" இந்தியன் என்று சொல்லடா, இறுமாப்புக் கொள்ளடா! "

இந்த இனிய இந்தியத் திருநாட்டில், நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பதால், நாம் அனைவரும் இந்தியர்கள். இந்திய நாட்டின் கலாச்சாரங்கள், இந்திய நாட்டின் பாரம்பரியங்கள், இந்திய நாட்டு மக்களின் கல்வித்திறன், இந்திய நாட்டு மக்களின், இயல்பான வாழ்க்கை முறைகள், இந்திய நாட்டின் செல்வங்கள், இந்திய நாட்டின் வியாபார நுணுக்கங்கள், இப்பூவுகில் உள்ள அனைவரையும் இன்றைய நாள் வரையில் வியப்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆகையினால் தான், இந்திய திருநாட்டினை காண்பதற்கு, உலகின் பல பாகங்களிலிருந்து, இந்தியாவிற்கு, கடல் வழியாகவும், தரை வழியாகவும் வழியினைத் தேடி வந்ததனால், பல புதிய நாடுகளை கண்டுப்பிடிக்க ஏதுவானது. இல்லையெனில், ஒரு மேற்கு இந்திய தீவோ, ஒரு அமெரிக்க கண்டமோ, மற்ற இதர நாடுகளும் இருப்பது தெரியாமல் போயிருக்கும்.

இந்தியக் கலாச்சாரங்கள் உலகப் புகழ்ப் பெற்றது. இல்லையென்றால், உலகிலுள்ள, மக்கள் ஏன் இந்தியாவை நாடி வரக் காரணமென்ன! இந்தியக் கலாச்சாரத்தை மதிக்கக் காரணம் என்ன? இந்த இனிய நாட்டினைக் காண ஏன் சுற்றுலா வருகின்றனர்?

கணித வளமும், மனித வளமும் உள்ள இந்த நாடு; சீரும், சிறப்பும், செல்வங்களும் நிறைந்து உள்ள இந்த நாடு; இயற்கையும், இயற்க்கை வளங்களும் நிறைந்த இந்த நாடு; குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையென, எல்லா சிறப்புகளும், நில வளங்களும் நிறைந்த இந்த நாடு, வந்தவரை வாழ வைத்து, இப்பாரினிலே, தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்துக்கொண்டிருக்கிறது.

இந்திய மக்கள், ஒரு இனிய, இயல்பான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இயல்பு வாழ்க்கை, பன்னாட்டு அரசர்களின் படையெடுப்பால் பாழாகி, அவர்களின் கலாச்சாரங்களும் சேர்ந்து, நம்மையெல்லாம், மேல்நாட்டு கலாச்சாரங்களும், கீழ்நாட்டு கலாச்சாரங்களும் சேர்ந்து, நம் கலாச்சாரத்தை பாழாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியக் கலாச்சாரங்கள், கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து கொண்டிருக்கிறது. ஏன் இந்த மாற்றங்கள்? சிந்திக்க வேண்டுகிறேன் அனைவரையும்!

பிரிவினைவாதிகளும், மதவாதிகளும் சேர்ந்து, இந்த திருநாட்டினை சிதைக்க, பிரித்து, மொத்தமாக இந்த நாட்டினை சீரழிக்க, இந்த நாட்டிலேயே பிறந்து, வாழ்ந்து, நம்மை சிறிது சிறிதாக அழிக்க எண்ணுகின்றனர். ஆனால், இந்த எண்ணங்கள், நம் இந்திய நாட்டின் சகோரத்துவ எண்ணங்களால் முறியடிக்கப்பட்டு, நம் இந்தியத் திருநாடு, என்றும் இளமையுடன், அன்றுப் போல் என்றும் துள்ளும் இளமையுடன் நடைப் பயின்றுக் கொண்டிருக்கிறது!

" இதுவே, இந்த எண்ணங்கள் தான், இந்த பாரத்தின் பெருமை! "

" வாழ்க பாரத தேசம், வாழியவே, வாழியவே பல்லாண்டு! "

ந. தெய்வசிகாமணி

எழுதியவர் : ந. தெய்வசிகாமணி (17-Nov-14, 1:19 am)
சேர்த்தது : ந தெய்வசிகாமணி
பார்வை : 856

மேலே