ஓர் பெண் சிசுவின் குரல் -கயல்விழி
கல்யாண வியாபாரத்தில்
கயவன் (கணவன்)னின்
காம விளையாட்டில்
கரு எனும் உருவில் என்னை
சுமந்த அன்னையே .
கர்ப்பத்தில் நான் தரிக்க
நீ கவலை கொண்டதன்
காரணத்தை அன்று
நான் அறியவில்லை
கரு கலைத்தல் என்று
கண்டதையும் கயவர் தர
கண்களில் அவர் மறைய
கழிவறைக்குள் போட்டு விட்டாய்
கற்பத்தில் நான் வளர
கண்ணீரில் நீ குளித்தாய்
பத்து மாதம் என்னை சுமக்க
நரகம் தனில் நீ வாழ்ந்தாய்
பூமி தொடும் ஆசையில் நான்
மகிழ
பிரசவ வலியால் நீ.துடித்தாய்
பேயென வந்தாள்
கிழம் ஒருத்தி
எதோ சொன்னாள் உன்னை
அதட்டி
வலியின் உச்சத்தில்
நான் பிறக்க
வருத்தத்தின் முடிவில் நீ
கண் மயங்க
பெண் சிசு என்றாள்
பேயாக வந்தவள்
கண்திறக்கும் முன் காரியத்தை
முடி
கட்டளை இட்டான் கயவர்
குலத்தலைவன்
நான் கண் முழித்த கணமே
கல்லிப்பால் அபிஷேகம்
கண் மூடினேன் நீ
கண்திறக்கும் முன்னமே நான்
அன்று உன் வேதனையின்
அர்த்தத்தை இன்று.உணர்ந்தேன்
அன்றே நான் அறிந்திருந்தால்
கர்ப்பத்திலே கரைந்திருப்பேனே
அம்மா
தாய் மடியும்
தாய் பாலும் இன்றி
கள்ளிப்பாலோடு மறைந்து போகின்றேன்
மண்ணோடு
மீண்டும் ஒருமுறை
மண்ணில் பிறவேன்
பெண் சிசுவாக. .!!!!