காதல் தோல்வி

காதல் தோல்வி
விண்மினியே இந்த
மண்ணில் பூத்த கண்மனிய
காணவேண்டும் உன்னை
காலமெல்லாம் என் காதலிய
கனவிலே என்
கவலையை மறந்தேன்
உன் நினைவிலே
என் நிம்மதியை தொலைத்தேன்
அருகில் இருந்து
தொலைந்து போனாயே
அழிந்து கொண்டிருக்கிறேன்
அருகில் வருவாயா
சின்ன சிறு சிரிப்பால்
என்னை சிதரடித்தாயே
உன் கண்ணக்குழி அழகில்
காதலை தந்தாயே
தனிமையில் தவிக்கின்றேன்
உன் நினைவுகளை நினைத்து
பிறக்கும் போது அழுதேன்
பிறந்த பின்னும் அழுகின்றேன்
உன் நினைவலைகள்
என்னை அடிக்குதடி
என் நெஞ்சமோ குமுறுதடி
வீரர்களும் இல்லை
விளையாட்டும் இல்லை
ஆனால் தோற்றுவிட்டேன்
என் காதல் போட்டியில்
வாய்ப்பு கிடைக்குமா
காத்துக் கொடிருக்கின்றேன்
அவளின் காதலுக்காக .....
கவிஞ்சன் கௌதம்