அவன் நினைவுகள் எனை கொல்லுதே

அவன் நினைவுகள் ..!!
******************************

உந்தன் நினைவுகள் எனில் கூர்வாளாய் இறங்குதடா
---கொஞ்சம் தள்ளிப்போ
நினைவால் எனை கிள்ளாது


கேட்டுப்பார் ஆடவன் உன்னை நினைக்கும்
-----ஒவ்வொரு நொடியும் எத்தனை ரணமாய்
வலிக்குமென்று காதலில் தோற்றுப்போனவளிடம்


உனக்கென்று தந்த உள்ளம் மட்டும்மல்ல
---உடலும் எனை ஏளனமாய் பார்க்கையில் - ஐயோ
என் இதயமும் வெடித்து சிதறுதடா ..!!


தனிமை கவிஞர்க்கு கவிதையினை அள்ளித்தருமாம்
--காதலில் அது காமம் தருமென்று அறியாது போய்விட்டேனே
இன்றோ மரணத்தின் சுவையை என்விழி வழியே காண்பித்து செல்கிறது


நான் ரசித்த அவன் தீண்டலும் தூண்டலும்
---அமிலம் என் தேகத்தில் சொட்டியத்தை போல்
உடலோடு என் உயிரையும் கருக்குதே


அவனை மறக்க எண்ணியே நினைக்கிறேன்
---எனையும் மீறி எனில் தங்கி இருக்கிறான்
அவனை விரட்ட ஏதேதோ செய்கிறேன் எனையும் அறியாது ..அடேய் என் போலிக் காதலா திரும்பி வந்தால் திருந்திவா
---எப்போதும் நீயே எனில் படரும் வாசனையாக யாசிக்கிறேன்
வெறுக்க நினைகிறேனா நினைக்க வெறுக்கிறேனோ அறியவில்லை


உன்னை மறக்க எண்ணி யாரென
------அறியாதவனோடெல்லாம் அன்பாய் பழகவிழைகிறேன்
விளையும் விபரீதம் அறிந்தும்


எனை நானே வெறுக்கிறேன்
--உன் நினைவு எனில் எங்கு உள்ளதென்று தேடியே
என் பொழுதுகள் வீணாய் கழிகின்றன ..


ஐயகோ நீ ஒருவனே எனக்கு வேண்டும்
---நீ தரும் வலிகளே போதும் என் வாழ்வு முழுவதும்
இருப்பினும் எனை நேசிக்காது நீ வெறுத்துக்கொண்டே இரு அதுபோதும் ..!!


நினைவின் கவியே கலைந்து போ
---காயத்தின் வலிகளை கல்வெட்டில் பதிக்க என்னால் இயலாது
முடிந்தால் நீயே என் முடிவை நிர்ணயம் செய்து விடு..!!!

எழுதியவர் : ஜென்னி (19-Nov-14, 10:59 am)
பார்வை : 2307

மேலே